இயக்குனர் மிஷ்கின் ‘துப்பறிவாளன்’ படத்தை அடுத்து தற்போது சாந்தனுவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடிகைகள் நித்யாமேன், சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர். நித்யாமேனன் மற்றும் சாய்பல்லவி இணைந்து நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது
படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை லிப்ரான் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்குவந்த பின்னர் ஆரம்பமாகும்..