அழிந்து வரும் கிராமத்து வாழ்வியலை சொல்லவரும் “ உளிரி “

554B6743

ஸ்ரீ லட்சுமி பிரியா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம்.ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ்.யோகேஷ்  தயாரிக்கும் படம் “ உளிரி “

இந்த படத்தில் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சயனி நடிக்கிறார். மற்றும்  பசங்க சிவகுமார், கலாராணி, யோகி, சர்மிளா, சுமதி ஆகியோர் நடித்துள்ளனர்.      

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது..

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை காவிரி ஆற்று படுகை மனிதர்களின் பஞ்சம் தீர்க்க உணவாக, அவர்களது பண்பாட்டின் கூறாக இருந்த “உளிரி  “ எனும் மீன்  இனமே இன்று அழிக்கப் பட்டு விட்டது…அதுமட்டுமல்லாமல் எனது வாழ்வியல் பண்பாட்டின், பல கூறுகள் அழிக்கப்  பட்டு இன்று காவிரியாற்று கிராமங்கள் தனது அடையாளங்களை இழந்து பொலிவற்று, இயல்பை தொலைத்து பொய்யான முகப் பூச்சோடு உண்மை பொலிவை இழந்து காணப்படுகிறது.நமது பண்பாட்டின் கூறாய் இருந்த இந்த காதல் இன்று அழிக்கப் பட்டிருக்கிறது. இப்படி தன் வாழ்விடத்தைச் சார்ந்து நடந்த நிகழ்வுகளைத் தொகுத்து ஒரு வாழ்வியல் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறேன் இந்த உளிரியை.

படப்பிடிப்பு கும்பகோணம், ஜெயங்கொண்டம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர் R.ஜெயகாந்தன்.

ஒளிப்பதிவை   வெங்கட் செய்ய,    சுரேஷ் அர்ஸ்  எடிட்டிங்   செய்ய                      எழுத்து, இயக்கம், பாடல்கள், இசை மேற்கொள்கிறார்   R.ஜெயகாந்தன்

554B3822554B4995554B6308554B6306

Leave a Response