ஜாலியான பொழுதுபோக்கு படமாக ‘மாரி 2’ இருக்கும் – தனுஷ்..!

தனுஷ் நடிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாரி 2’ திரைப்படம் வருகிற (டிசம்பர்) 21ஆம் தேதி திரைக்கு வருவதையொட்டி இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பாலாஜி மோகன், “இந்த படம் எடுக்க முக்கிய பக்கபலமாக இருந்த தனுஷூக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ‘மாரி’ முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் நன்றாக இருக்கும். யுவன் சங்கர் ராஜா மூன்று அருமையான பாடல்களை தந்துள்ளார். வில்லன் வேடத்தில் டோவினோ நடித்துள்ளார். அவர் மாரிக்கு ஒரு மாஸ் வில்லனாக அமைத்துள்ளார். படத்தில் நடித்த கிருஷ்ணா, ,வரலட்சுமி, சாய்பல்லவி, ரோபோ சங்கர், வினோத் ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். டிசம்பர் 21ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. ஆடியன்ஸ் மத்தியில் கண்டிப்பாக வரவேற்பை பெறும்” என்றார்.

தனுஷ் பேசுகையில், “எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் மாரி. .எனவே இந்த படத்தின் அடுத்த பாகத்திற்காக நான் காத்திருந்தேன். மாரி நல்லவனும் இல்லை, கெட்டவனும் இல்லை. அப்படிப்பட்ட கதாபாத்திரம். ஜாலியான பொழுதுபோக்குப் படமாக ‘மாரி 2’ இருக்கும். குடும்பத்தோட ரசிச்சி பாக்கலாம் .

“இளையராஜா இந்த படத்தில் பாட்டு பாடி இருக்கிறார். அது எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய ஆசிர்வாதம். யுவன் சங்கர் ராஜாவுக்கு நான் ரொம்ப கடமைப்பட்டு இருக்கிறேன். அவர் 3 அருமையான பாடல்களை தந்துள்ளார். டோவினோ நடிப்பு பிரமாதம். சாய் பல்லவி, வரலட்சுமி ஆகியோருடன் முதன் முதலாக நடித்ததில் மகிழ்ச்சி. ரோபோ சங்கர், வினோத் ஆகியோருடன் படப்பிடிப்பில் பணிபுரிந்தது ரொம்ப சந்தோசமாக இருந்தது. படப்பிடிப்பிற்குச் சென்றவுடன் முதலில் அவர்களைத் தான் தேடுவேன். படம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அனைவரும் திரையில் கண்டு களியுங்கள்” என்றார் தனுஷ்.

இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் கிருஷ்ணா, நடிகைகள் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் மற்றும் ‘வுண்டர்பார்’ வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினார்கள்.

 

Leave a Response