டப்பிங்-காக தமிழ் கற்றுகொள்வேன் என சொல்லும் நடிகர்…

vijay-devarakonda-nota-759

பெல்லி சூப்புலு, அர்ஜுன் ரெட்டி ஆகிய தெலுங்கு படங்களின் மூலம் புகழ்பெற்ற விஜய் தேவரகொண்டா, நோட்டா என்ற படத்தின் மூலமாக தமிழுக்கு வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இதில் மெஹ்ரின், சத்யராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர். ஆனந்த் சங்கர் இயக்குகிறார்.

சென்னையில் நடந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா பேசியதாவது:

‘எண்ணித் துணிக கருமம்’ என்றார் திருவள்ளுவர். ஒரு விஷயத்தை ஆரம்பிப்பதற்கு முன், நிறைய யோசிக்க வேண்டும். அப்படி ஆரம்பித்துவிட்டால், அதைச் செய்து முடிப்பதைத் தவிர வேறு எதைப்பற்றியும் யோசிக்கக்கூடாது.

இப்படித்தான் தமிழ் தெரியாததால், தமிழ்ப் படத்தில் நடிக்கலாமா? வேண்டாமா என்பது பற்றி நிறைய யோசித்தேன். இதனால், பல படங்களை நான் தவிர்த்தேன். நோட்டா கதையை ஆனந்த் சங்கர் சொன்னபோது, தமிழில் துணிச்சலுடன் நடிக்க முடிவு செய்தேன். தமிழ் பேச கற்றுக்கொண்டு, நானே
இந்தப் படத்துக்கு டப்பிங் பேசுவேன் என  கூறி முடித்தார்..

maxresdefault (1)

Leave a Response