சிங்கம் 2 படத்தின் பிரமாண்ட இசை வெளியீடு!!

சிங்கம் படத்தின் இரண்டாம் பாகமான சிங்கம் 2, இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்ஸிகா நடிப்பில் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. படப்பிடிப்பு முடிவுற்றதால் அடுத்தகட்டமாக ரிலீஸுக்கான வேலைகளில் இறங்கியுள்ளது சிங்கம் 2 யூனிட்.

சிங்கம் 2 வருகிற ஜூன் மாதம் 14-ஆம் தேதி ரிலீஸாகிறது. ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான சிங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதால் இத்திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

முன்னதாக ஜூன் 2ஆம் தேதி சிங்கம் 2 படத்தின் இசை வெளியீடு திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சென்னை டிரேட் சென்டரில் நடைபெற உள்ளது.