தென்னாப்பிரிக்கா இந்தியா: 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி ..

08-1515410234-bumrah122-1516974815

நேற்று நடந்த, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்ட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து ஜோகன்னஸ்பர்க்கில் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. ஜோகன்னஸ்பர்க் மைதானம் இந்திய வீரர்களை படாதபாடுபடுத்தியது. இருப்பினும் சமாளித்து 2-வது இன்னிங்ஸில் 247 ரன்கள் குவித்தனர். 224 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா அணி 177 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் இந்திய அணி 63 ரன்களில் அபார வெற்றியைப் பெற்றது. இந்திய அணியின் ஷமி அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

Leave a Response