ஜெ.,கருணாநிதியை மிஞ்சிய மாஸ்டர் ப்ளான்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர்சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்யலாமா என திடீர் ஆலோசனை நடத்தத் தொடங்கிவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

panieeeee

இதுகுறித்து விளாவாரியாக முதல்வரிடம் பேசிய அதிகாரிகள், ‘இதற்கு முன்பாக முதல்வர்களாக இருந்த இரு பெரும் ஜாம்பவான்களான கருணாநிதியோ, ஜெயலலிதாவோ இப்படியான முடிவை ஒருமுறை கூட யோசிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், அவர்கள் இருவரும் நினைத்திருந்தால், பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்திருக்க முடியும். பேரறிவாளனை பரோலில் விடக் கூட அவர்கள் தைரியமான முடிவை எடுக்கவில்லை. காரணம், அவர்களுக்கு நிறைய தயக்கம் இருந்தது.

இப்போது பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் நீங்கள் விடுதலை செய்து உத்தரவிட்டால், சில எதிர்ப்புகள் வந்தாலும், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். அதுமட்டுமல்ல அரசியல் வரலாற்றில் இடம் பிடிக்கக் கூடிய சம்பவமாக அது அமையும். அதேபோல, ஜெயலலிதாவுக்கோ, கருணாநிதிக்கோ இருந்த நெருக்கடி உங்களுக்கு இல்லை.

அதற்கு முதல்வர், ‘இதனால் எனக்கு பல சிக்கல் வரும் என்பது எனக்கும் தெரியும். ஆனால், நீங்க சொல்றதையெல்லாம் வெச்சுப் பார்க்கும் போது, உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக எல்லோரையும் விடுதலை செய்ய முடியவில்லை என்றாலும், பேரறிவாளனை மட்டுமாவது விடுதலை செய்யலாமா என யோசிக்கிறேன். நானும் துணை முதல்வரும் இது சம்பந்தமா பேசுறோம். நிச்சயம் நல்ல முடிவாக எடுக்கிறோம்’ என சொன்னாராம் எடப்பாடியார்.

எடப்பாடி மட்டும் இப்படி செய்தால், அரசியல் சாசன சர்ச்சையாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. இருந்தாலும் இது தொடர்பாக முடிவெடுத்து தனது செல்வாக்கை உயர்த்த எடப்பாடி மற்றும் பன்னீர் இதை செய்தே தீர வேண்டும் என உறுதியாக இருப்பதாக பேசப்படுகிறது.

Leave a Response