ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு சம்மன்

amma jaya

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 4 பேருக்கு ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணை ஜெ., மரணம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான, விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது.

இந்த கமிஷன், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், அப்பல்லோ மருத்துவமனை, முன்னாள் தலைமை செயலர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகன ராவ், உறவினர்கள் தீபா, தீபக் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. சம்மன் இந்நிலையில், ஆறுமுகசாமி கமிஷன், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வெங்கட்ராமன், ராமலிங்கம், ஜெயஸ்ரீ முரளிதரன், விஜயகுமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதாவின் செயலராக இருந்து ஓய்வு பெற்ற வெங்கட்ராமன் ஜன.,30ம் தேதியும், முதல்வரின் 2ம் நிலை செயலராக இருந்த விஜயகுமார் ஜன.,31ம் தேதியும், கலை மற்றும் கலாசார ஆணையராக இருக்கும் ராமலிங்கம் பிப்.,1ம் தேதியும், முதல்வரின செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் பிப்.,2ம் தேதியும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் பிப்.,5ம் தேதியும், ஜெயலலிதா கார் ஓட்டுனர் ஐய்யப்பன் பிப்.,8 ம் தேதி ஆஜராகவும் விசாரணை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

Leave a Response