வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்.. இந்து மக்கள் கூட்டத்தில் எச்சரிக்கை..

pic

சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், பாடலாசிரியர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசினார். இதற்கு, இந்துக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகம் முழுவதும், போராட்டங்களும் நடந்து வருகின்றன.
‘பிழைப்பிற்காக பெண்களை வர்ணித்து பாட்டு எழுதும் வைரமுத்துவுக்கு, ஆண்டாள் குறித்து அவதுாறு பேச எந்த தகுதியும் இல்லை. அவர், மன்னிப்பு கேட்காவிட்டால், மெரினாவில் மீண்டும் போராட்டம் வெடிக்கும்’ என, இந்து மக்கள் கூட்டத்தில் எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் வைரமுத்துவுக்கு எதிராக, ‘வாழ்க இந்து நீதி தர்மம்’ எனும் தலைப்பில் ஜீயர்கள், மடாதிபதிகள், சிவாச்சாரியார்கள், இந்து அமைப்புகள், ஆன்மிக நல விரும்பிகள் பங்கேற்ற பிரமாண்ட கூட்டம், சென்னை, அரசு விருந்தினர் மாளிகை அருகே நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீவில்லிப்புத்துார், மன்னார்குடி, ஆழ்வார் திருநகர் ஜீயர்கள், முத்து சிவாச்சாரியார், வி.எச்.பி., தலைவர் வேதாந்தம், இந்து முன்னணி அமைப்பின், ராம கோபாலன், உபன்யாசகர்கள் வேங்கடகிருஷ்ணன், அனந்த பத்மநாபச்சாரியார், ஆர்.வி.பி.எஸ்.மணியன், தாம்பராஸ் தலைவர் நாராயணன், அரவிந்தலோசனன், நடிகர் விசு, எஸ்.வி.சேகர், குட்டி பத்மினி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.

மதமும் ஆன்மிகமும் கற்பூரம் போன்றது. அதன் வாசனை சிலருக்கு தெரியாது. ஆண்டாள் குறித்து அவதுாறு பேச யாருக்கும் அருகதை கிடையாது. இந்து மதம் சகிப்புத்தன்மை நிறைந்தது. இந்துக்கள் சட்டத்தை மதிப்பவர்கள். இந்துக்கள் இணையும் நேரம் வந்துவிட்டது. பெண் குலத்தின் தெய்வம் ஆண்டாள் நாச்சியார் குறித்து அவதுாறு பேசிய வைரமுத்து, ராமனை கூட அவதுாறாக பேசியுள்ளார்.பிழைப்பிற்காக பெண்களை வர்ணித்து பாட்டு எழுதும் வைரமுத்துவுக்கு, தெய்வப்புலவர் ஆண்டாள் நாச்சியார் குறித்து அவதுாறு பேச எந்த தகுதியும் கிடையாது.தமிழக அரசு இனியும் தாமதிக்காமல், இந்து மற்றும் தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். வைரமுத்து தன் தவறை உணர்ந்து, நாளை மாலைக்குள் ஸ்ரீவில்லிபுத்துாரில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், மெரினாவில் மீண்டும் போராட்டம் வெடிக்கும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

Leave a Response