ராஜஸ்தானில் கொள்ளையர்களுக்கு ஆதரவாக இருந்த தேஜ்ராம் என்ற போலீஸ் கைது!

periyapandi-policedemands1

கொளத்தூர் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில், தொடர்புடைய ராஜஸ்தான் கொள்ளையன் நாதுராம் மற்றும் அவன் கூட்டாளிகளை மடக்கிபிடிக்க சென்ற தமிழக தனிப்படை போலீசார் மீது கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உயிரிழந்தார். மற்றொரு இன்ஸ்பெக்டர் காயமடைந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராஜஸ்தானில் கொள்ளையர்களுக்கு ஆதரவாக இருந்த தேஜ்ராம் என்ற போலீஸ், சுண்ணாம்பு கால்வாய் அதிபரை ஜெய்த்ரான் போலீசார் கைது செய்துள்ளனர்.
naturam5
இவர் சுமார் 4 நாட்கள் கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தேஜ்ராம் மட்டுமின்றி அவரின் மனைவி பித்யா, மகள்கள் சுகுணா மற்றும் ரஜல் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
periya2
கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றியதால்தான், போலீசாரிடமிருந்து நாதுராம் கோஷ்டியினர் எளிதில் தப்பியுள்ளனர். மேலும், ஊர்காகரர்கள் சிலரும் தமிழக காவல்துறைக்கு எதிராக கல்வீச்சு நடத்தியுள்ளதாக கூறப்பட்டது.
இதனிடையே நால்வரை கைது செய்துள்ளதால் வழக்கில் திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இவர்களை சென்னை அழைத்துவர தமிழக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவர்களிடம் உரிய வகையில் விசாரித்தால், நாதுராம் குறித்த தகவல் வெளியே வரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Leave a Response