“மாநகரம்” சந்திப்கிஷன், புதுமுகம் லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், பகவதி பெருமாள், மைம் கோபி, ஜெயபிரகாஷ், அக்ஷரா கெளடா உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க, நலன் குமாரசாமியின் திரைக்கதை, வசனத்தில், லியோ ஜான் பாலின் படத்தொகுப்பில், கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில், ஜிப்ரானின் இசையில் படு பிரமாண்டமாக வந்திருக்கும் படம் “மாயவன்”.
நியூரோ சயின்ஸை பயன்படுத்தி ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழும் வித்தையை தன் பல ஆண்டு தீவிர ஆராய்ச்சியின் வாயிலாக கண்டுபிடிக்கிறார் ஒரு நியூரோ சயின்டிஸ்ட்.
அதை அவரிடமிருந்து திருட அவரது மிலிட்டரி மேஜர் நண்பர், அந்த சயின்ஸை பயன்படுத்தி பல நூறு ஆண்டுகள் வாழ களம் இறங்குகிறார்.
அதற்கு தடையாக இருப்பவர்களை அந்த மேஜர் தொடர்ந்து தீர்த்து கட்ட, அந்த கொலை வழக்குகளில் துப்புதுவங்க்காமல் இறங்கும் இளம் போலீஸ் ஆய்வாளர் ஹீரோ., மனநல பாதிப்பிற்கு உள்ளாகிறார்.
அவருக்கு மன நல பாதிப்பில் இருந்து மீள உதவும் மனநல மருத்துவரான ஹீரோயின், அந்த வழக்கிலும் குற்றவாளி பிடிபட ஹீரோவுக்கு எவ்வாறு உதவுகிறார்..? ஹீரோயினின் உதவியுடன் ஹீரோ, மாயவனான வில்லனை தீர்த்து கட்டுகிறாரா? இல்லையா…? என்பது தான் “மாயவன்” படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான கதை.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு நிரம்பிய போலீஸ் அதிகாரியாக “மாநகரம்” சந்திப்கிஷன், மிரட்டியிருக்கிறார். அவரது ஒட்டுமீசை மட்டும் தான் சற்றே உறுத்தல்.
நாயகருக்கு எல்லா வகையிலும் உதவும் அழகிய நாயகியாக, புதுமுகம் லாவண்யா திரிபாதி, சாமுத்ரிகா லட்சணம் நிரம்பிய அறிமுகமாக தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருப்பது பெரிய அதிர்ஷ்டம்.
வில்லனின் விஸ்வரூப அவதாரங்களில் ஒரு பாத்திரமாக டேனியல் பாலாஜி, மைம் கோபி, உள்ளிட்டோர் மிரட்டியுள்ளனர்.
இவர்கள் எல்லோரையும் அடக்கி ஆளும் மெயின் வில்லனாக மிலிட்டரி மேஜராக இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், செம்ம மிரட்டல் காட்டியுள்ளார்!
பரிதாபத்திற்குரிய நாயகரின் தோழர் போலீஸாக பகவதி பெருமாள், சயின்டிஸ்ட் ஜெயபிரகாஷ், உள்ளிட்ட ஒவ்வொரு நட்சத்திரமும் அவர்களது நடிப்பும் படத்திற்கு பெரும் பலம்.
லியோ ஜான் பாலின் படத்தொகுப்பில் முன் பாதி சற்றே பழுது என்றாலும், பின் பாதி பிரமாண்டம்.
கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில், சயின்ஸ் பிக்ஷன் காட்சிகளும் படம் முழுக்க காட்டப்படும் அந்த நியூரோ சயின்ஸ் லேப்களும் தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத பிரமாண்டம்.
ஜிப்ரானின் இசையில் “மெல்ல மெல்ல சொல்லவா…” “ஜீவா ஜீவா….” உள்ளிட்ட பாடல் களும் பின்னணி இசையும் இப்படத்திற்கும், காட்சியமைப்புகளுக்கும் ஏற்ற அதிரடி சரவெடியாக உள்ளது.
நலன் குமாரசாமியின் வசனத்திலும், திரைக்கதையிலும் இருக்கும் பிரமாண்டம் இயக்குனர் சி.வி.குமாரின் காட்சிப்படுத்தல்களில் மேலும் பிரமாண்டமாக ஜொலிப்பது “மாயவன்” படம் மேலும் ஜொலிக்கிறது.
ஆக மொத்தத்தில் ஒரு சில லாஜிக் குறைகள், காட்சி பிழைகள் படத்தில் ஆங்காங்கே தென்பட்டாலும், இயக்குனர் சி.வி.குமாரே. இப்படத்தின் தயாரிப்பாளரும் என்பதாலோ, என்னவோ… மொத்தப் படத்தின் பிரமாண்டத்திற்கு முன்பாக அதெல்லாம் ஒரு குறையாக தெரியாதது படத்திற்கு மிகவும் பலம்!