ஆர்.கே.நகரில் தினகரனை மகிழுட்டும் வகையில் வந்த கமெண்ட்!

flow

ஆர் கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தினகரன் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் நேற்று இரவு அந்த தொகுதிக்குட்பட்ட ஒரு இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது வாக்காளர்கள் அவர் மீது மலர்த்தூவி வரவேற்றனர். வாக்காளர்களுக்கு மத்தியில் தினகரன் பேசுகையில், வாக்காள அடிப்பீங்கன்னு பார்த்தா இப்ப என்னை பூவால அடிக்க ஆரம்பிச்சுட்டீங்களே என்றார்.

அதற்கு வாக்காளர் ஒருவர் இன்னிக்கு பூவால அப்பாலிக்கா வாக்காள என்று ஒரு குரல் எழுந்தது. இதனால் டிடிவி தரப்பின் முகம் முகப்பு விளக்கை விட மிகவும் பிரகாசமாகவும் தினகரன் தனக்கே உரிய அந்த புன்னகையுடனும் காட்சியளித்தார்.

Leave a Response