சென்னையில் நகை கடை கொள்ளை- முக்கிய குற்றவாளி கைது!

_99184870_bb

கொளத்தூரில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த 16-ஆம் தேதி கொள்ளையர்கள் சிலர் மூன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டுச் சென்றனர்.

இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோர் ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் மறைந்திருப்பதாக தகவல் வெளியானது.

IMG_20171214_230238

இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீஸார் பாலி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றனர். நேற்று அதிகாலை அவர்களை பிடிக்க ராம்பூர்கலாவுக்கு தனிப்படையினர் சென்றபோது அங்கு செங்கல் சூளை அருகே மறைந்திருந்த நாதுராம், மதுரவாயல் காவல் துறை ஆய்வாளர் பெரியபாண்டியின் துப்பாக்கியை பறித்தார்.
அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் பெரிய பாண்டி உள்ளிட்டோரை நாதுராம் சுட்டார். இதில் பெரிய பாண்டி வீரமரணம் அடைந்தார். மேலும் கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர்.

periapandi43534-1
இந்நிலையில் பெரிய பாண்டியின் உடல் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சென்னைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. அங்கு சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் அவரது உடல் சென்னையிலிருந்து பெரிய பாண்டியின் சொந்த ஊரான சங்கரன்கோவிலில் உள்ள மூவிருந்தாளி எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிலையில்
சென்னை நகைக் கடை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளி தினேஷ் சவுத்ரியை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக உள்ள நாதுராமை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Leave a Response