ராயபுரத்தில் புதியதாய் குக்கர் கடை திறப்பு- வருமான வரித்துறை சோதனை!

rk-nagar-600

ஆர்.கே.நகரில் நீண்ட நாள் இழுப்பறிக்குபிறகு டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன், டிடிவி தினகரன் உள்ளிட்ட சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tamil_News_large_191356820171207224021

தொப்பி சின்னம் மீண்டும் கிடைக்காததால் டிடிவி தினகரன் பிரஷர் குக்கர் சின்னத்துக்கு வாக்குகேட்டு பிரசாரம் செய்து வருகிறார்.

இதனிடையே ஆர்.கே.நகரில் கடும் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆர்.கே.நகரில் நேர்மையாக தேர்தலை நடத்த முடியவில்லை என்றால் ரத்து செய்து விட்டு செல்லுங்கள் என பாஜக தமிழிசை தெரிவித்து வருகின்றார்.

மேலும் எதிர்கட்சிகளும் கடும் குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், ஆர்.கே.நகரில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க தேர்தல் ஆணையம் பாதுகாப்பை தீவிரப்படுத்தி வருகிறது.

51+5yrJBTnL._SL1000_

இதைதொடர்ந்து சென்னை காசிமேட்டில் வாகன தணிக்கையில் 500 குக்கர்களை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது ராயபுரத்தில் புதிதாக குக்கர் கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி மக்களுக்கு டோக்கன் வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் வந்தது.

IMG_20171214_165132

இதையடுத்து அதிக குக்கர் இறக்கப்பட்டதால் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் வருமான வரித்துறையினர் அந்த கடையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Response