ஒரே தெருவில் இரண்டாவது முறை தீ விபத்து- காரணம் கரப்பான் பூச்சி!

bedbugs-womanfired3

அமெரிக்காவில் மக்கள் அதிகமாக வசிக்கும் சின்சினாட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த விபத்து நடைபெற்று இருக்கிறது. முதலில் அந்த வீட்டில் இருந்த பெண்மணி அங்கு இருக்கும் கரப்பான் பூச்சிகளை விரட்டுவதற்காக மருந்து அடித்துள்ளார். ஆனாலும் கரப்பான் பூச்சி போகவில்லை என்றதும் தீ பந்தத்தை எடுத்து வீட்டு சுவர்களில் காட்டி இருக்கிறார். ஆனால் அந்த பெண் கவனக்குறைவாக இருந்த காரணத்தால் வீடு தீ பற்ற துவங்கி இருக்கிறது.

முதலில் ஒரு வீட்டில் மட்டும் இருந்த தீ கொஞ்சம் கொஞ்சமாக பரவ தொடங்கியது. பின் சில மணி நேரத்தில் அந்த தெருவில் இருக்கும் மூன்று வீடுகளை தீ ஆக்கிரமித்தது. இந்த பெரும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி இருக்கிறார்கள். பின் நான்கு மணிநேர போராட்டத்திற்கு பின் தீ ஒரு வழியாக அணைக்கப்பட்டது.

14-1513251846-bedbugs-womanfired2

இந்த சம்பவத்தின் காரணமாக மூன்று வீடுகளும் மோசமாக சேதம் அடைந்தது. இதனால் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் 10க்கும் மேற்பட்டோருக்கு தீவிரமான காயங்கள் ஏற்பட்டுள்ளது. மூன்றாவது வீட்டில் இருந்த சேமிப்பு பணம் எரிந்த காரணத்தால் ஒரு கோடிக்கும் மேல் சேதம் ஏற்பட்டுள்ளது.

சின்சினாட்டியில் இந்த சம்பவம் இரண்டாவது முறையாக நடக்கிறது. அதே தெருவில் வசிக்கும் வேறு ஒரு ஆண் இதே போல் வீட்டை கொளுத்திவிட்டு இருக்கிறார். தற்போது இந்த இரண்டு தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களும் மருத்துவமனையில் உள்ளனர். மேலும் செஞ்சிலுவை இயக்கம் இவர்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது.

Leave a Response