குஜராத் தேர்தல் பிரச்சாரம் முடிவு!

pic (4)

காந்திநகர், குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 9-ந்தேதி 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடந்தது. 68 சதவீத வாக்குகள் பதிவானது. இதையடுத்து குஜராத் மாநிலத்தின் மத்திய மண்டலத்திலும் வடக்கு மண்டலத்திலும் உள்ள 93 தொகுதிகளில் நாளை மறுநாள் (14-ந்தேதி) 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக நடந்து வந்தது.

2-ம் கட்ட தேர்தல் நடக்க உள்ள 93 தொகுதிகளில் பட்டேல் இன மக்கள் கணிசமாக உள்ளனர். பட்டேல் இன மக்களின் புதிய இளம் தலைவராக உருவெடுத்துள்ள ஹார்த்திக் பட்டேல் சொந்த ஊர் மத்திய மண்டலத்தில் உள்ளது.

Tamil_News_large1

2-ம் கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கிடைக்கும் வாக்குகள் பா.ஜ.க. – காங்கிரஸ் கட்சிகளின் ஆட்சி கனவுக்கு விடை அளிப்பதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் பா.ஜ.க., காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டனர்.

அனல் பறந்த அந்த பிரசாரம் இன்று (செவ்வாய்க் கிழமை) பிற்பகலுடன் ஓய்ந்தது. கடைசி நாளான இன்று காலை அனைத்து கட்சி வேட்பாளர்களும் போட்டி போட்டு ஆதரவு திரட்டினார்கள்.

இன்று மாலை பிரசாரம் ஓய்ந்ததும் அனைத்து வாக்குச் சாவடிகளும் துணை நிலை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். 14-ந்தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடை பெறும்.

Modi_-_Rahul_gandh

18-ந்தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். அன்று மதியம் குஜராத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது தெரிந்து விடும்.

வழக்கமாக காங்கிரஸ் தலைவர்களை விட பிரதமர் மோடி அதிக தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசுவது உண்டு. குஜராத்திலும் ராகுலை விட மோடி அதிக பொதுக்கூட்டங்களில் பேச திட்டமிட்டிருந்தார்.

ஆனால் பிரதமர் மோடியின் பல கூட்டங்கள் ரத்தாகி விட்டது. ஆனால் ராகுல் சில கூட்டங்களை தவிர மற்ற அனைத்து கூட்டங்களிலும் பேசி ஆதரவு திரட்டினார். மோடியை விட ராகுல் அதிக பொதுக்கூட்டங்களில் பேசி பிரசாரம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response