ஜெயலலிதா கைரேகை வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை..!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
திருப்பரங்குன்றத்தில் கடந்தாண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில், வெற்றிபெற்ற அ.தி.மு.க வேட்பாளர் ஏ.கே.போஸ்க்கு எதிராக தி.மு.க வேட்பாளர் சரவணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்தமனுவில், ‘ஜெயலலிதா, சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, திருப்பரங்குன்றம் தொகுதிக்கான வேட்பாளராக ஏ.கே.போஸையும் அவருக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கக்கோரியும் தேர்தல் ஆணைய படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டுள்ளது. ஜெயலலிதா சுயநினைவுடன் இருக்கும்போது இந்தக் கைரேகை பெறப்பட்டதா என்பது சந்தேகமாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

Jayalalitha-750x506

இந்தவழக்கு, நீதிபதி வேல்முருகன் முன்னிலையில், நவம்பர் 24-ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர், ‘ஜெயலலிதாவின் கைரேகைதான் சர்ச்சையாக உள்ளது. எனவே ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்றபோது அவரிடம் பெறப்பட்ட கைரேகையைப் பரப்பண அக்ரஹார சிறை கண்காணிப்பாளர் நேரில்வந்து உயர் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். ஜெயலலிதாவின் ஆதார் ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையத்துக்கும்’ அவர் உத்தரவிட்டிருந்தார். அதேநேரத்தில், ஜெயலலிதாவின் கைரேகை ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய தடை விதிக்க வேண்டும் என்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘ஜெயலலிதா கைரேகை தொடர்பான ஆவணங்களை உயர் நீதிமன்றத்தில் சமர்பிக்க தடைவிதித்தனர். மேலும், அந்த வழக்கு விசாரணைக்கும் தடைவிதித்து உத்தரவிட்டனர்.

Leave a Response