கன்னியாகுமரி மாவட்டதை தமிழக அரசு புறக்கணித்துள்ளது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

 

8a_17068

ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். புயல் பாதிப்புகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஸ்டாலின், புயல் குறித்து அரசு முன்னெச்சரிக்கை செய்யவில்லை என்று மீனவர்கள் புகார் அளித்ததாக  தெரிவித்துள்ளார். மாயமான மீனவர்கள் குறித்து அரசு முறையாக கணக்கெடுக்கவில்லை என்றும் மாயமானவர்களை மீட்கும் பணியில் அரசு தீவிரம் காட்டவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

கேரளாவில் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு ரூ.7 லட்சம் மட்டுமே இழப்பீடு நிதியாக அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆடம்பர விழாக்களை நடத்துவதை தவிர்த்து நிவாரணப் பணிகளில் அரசு ஈடுபட வேண்டும் என்றும், வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடு கட்ட தமிழக அரசு உதவ வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கன்னியாகுமரி மாவட்டதை தமிழக அரசு புறக்கணித்துள்ளது என்று கூறியுள்ள அவர் கன்னியாகுமரியில் 40% இடங்களில் மட்டுமே மின் விநியோகம் செய்யப்படுவதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Response