ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த ஏராளமான கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் ஓகி புயலில் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து ஓகி புயலில் இருந்து தப்பிக்க ஏதுவான கரை ஓரப் பகுதிகளில் தமிழகம் மற்றும் கேரளா மீனவர்கள் கரை ஒதுங்கினர்.
தமிழகம் கேரளா மீனவர்கள்
கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான தமிழகம் மற்றும் கேரளா மீனவர்கள் கரை ஒதுங்கினர். அவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் பாதுகாப்பு அளித்தன.

அதேபோல் குஜராத் கடற்பரப்புக்குள் 600 தமிழக மீனவர்கள் சென்றுள்ளனர். அம்மாநில துறைமுகத்தில் கரை ஒதுங்க மீனவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால் குஜராத் பாஜக அரசு, தமிழக மீனவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டதாக சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இதனால் 600 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்து வருவதாகவும் கூறப்பட்டது.
குஜராத் தேர்தலை முன்வைத்து மீனவர்களை அனுமதிக்க மறுத்ததாக கூறப்பட்டது. தற்போது மீனவர்களை குஜராத் அரசு அனுமதித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.