அதிமுக அம்மா அணி நாளை முதல் தேர்தல் பிரசாரம்!

ttv12._L_styvpf

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலையொட்டி அதிமுக அம்மா அணி ஆலோசனைக் கூட்டம் சென்னை, தண்டையார்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அணியின் மாவட்டச் செயலர் பி.வெற்றிவேல் தலைமை வகித்தார். அவைத் தலைவர் அன்பழகன், பொருளாளர் ரங்கசாமி, நாஞ்சில் சம்பத், மாவட்டச் செயலர்கள் வி.பி.கலைராஜன், தங்கதமிழ்ச்செல்வன், செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி, செந்தமிழன், பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ttv1

தினகரன் பங்கேற்கவில்லை:-

இக்கூட்டத்தில் பங்கேற்கவிருந்த ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரன், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகளை பார்வையிடச் சென்றுள்ளதாகவும், அவர் செவ்வாய்க்கிழமை முதல் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகவும், வெற்றிவேல் தெரிவித்தார்.

கூட்டம் நடந்த பகுதியில் கட்டப்பட்டிருந்த கொடிகளில், அண்ணா இலச்சினை இல்லாத கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணம் ஆகியன இடம்பெற்றிருந்தன.

 

Leave a Response