அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது!

thiruvannaamalai

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தீபத்திருவிழா கடந்த, 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று கார்த்திகை தீபத்திருநாள் நடைபெற உள்ளது. மலையுச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி, இன்று அதிகாலை 3.20 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் கருவறை முன்பாக சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

thiruvannaamalai3

இன்று மாலை 6 மணிக்கு, கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. அதற்கான நெருப்பு கோவிலில் ஏற்றப்பட்டுள்ள பரணி தீபத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படும்.

தீபம் ஏற்றப்படும்போது, பஞ்ச மூர்த்திகள் தங்கக்கொடி மரம் முன் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி ஒன்றாக அமர்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு செல்வார்கள் என்பதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப்பணிக்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Response