மோடிக்கு ரகசிய அட்வைஸ் கொடுத் ஒபாமா!

barackobama-narendramodi

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு நிருபர்களிடம் பேசிய ஒபாமா இத்தகவலை தெரிவித்தார். அந்த தகவல் என்ன என்பது குறித்தும் ஒபாமா தெரிவித்தார். மோடி காதில் ஒபாமா கூறியது என்ன என்பது பற்றி அவரே கூறிய வார்த்தைகள் இதுதான்.

“ஒரு நாடு குழுக்கள் அடிப்படையில் பிரியக் கூடாது” என்று நரேந்திர மோடியிடம் தனிப்பட்ட முறையில் நான் தெரிவித்தேன். இது அமெரிக்க மக்களுக்கும் பொருந்தும். மக்கள் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை பார்க்கிறார்களே தவிர ஒற்றுமைகளை பார்ப்பதில்லை” என்றார் ஒபாமா.

ஒற்றுமைகள் என்பது பாலியல் அடிப்படையில் மட்டுமே உள்ளது. நாம் இந்த விஷயத்தில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஒபாமா தெரிவித்தார். ஆங்கில பத்திரிகையொன்றின் உச்சிமாநாட்டில் பங்கேற்க ஒபாமா இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

barackobama-modi874

இதனிடையே, உங்கள் கருத்துக்கு மோடி என்ன பதில் சொன்னார் என்று நிருபர்கள் ஒபாமாவிடம் கேட்டபோது, தனது நோக்கம், தங்களின் தனிப்பட்ட உரையாடல்களை வெளியிட வேண்டும் என்பது இல்லை என்று கூறினார் ஒபாமா.

இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், தங்களை இந்தியர்கள் என அழைப்பதில் பெருமிதம் கொள்கிறார்கள். பல நாடுகளில் சிறுபான்மையினர் இதுபோன்ற குண நலனோடு இருப்பது கிடையாது. எனவே, இந்திய அரசும், பெரும்பான்மை மக்களும், முஸ்லிம்களின் இந்த குண நலனை பாதுகாக்க, ஊக்கம் கொடுக்க தேவையான செயல்பாடுகளைத்தான் மேற்கொள்ள வேண்டும் என்றார் ஒபாமா.

Leave a Response