கன்னியாகுமரியை சூறையாடிய ஓகி லட்சத்தீவுவில் ஒதுங்கியுள்ளது!

kanniyakumari3345

வங்கக்கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்தது. கன்னியாகுமரியில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்திலும் இலங்கையில் இருந்து 240 கிலோ மீட்டர் தூரத்திலும் இருந்த அந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. ஓகி என்று பெயரிடப்பட்ட அந்த புயல் நேற்று கன்னியாகுமரியை நெருங்கியது. கன்னியாகுமரிக்கு தெற்கே 60 கி.மீ தொலைவில் ஓகி புயல் மையம் கொண்டிருந்த போது கனமழை கொட்டித்தீர்த்தது.

cyclone-ockhi513769.jpg.pagespeed.ic.6K3YFJmxVp

ஓகி புயலின் கோர தாண்டவத்திற்கு கன்னியாகுமரி மாவட்டம் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. சூறைக்காற்றுடன் பெய்த மழையால் பல இடங்களில் மரங்களும், மின்கம்பங்களும் முறிந்துள்ளன. பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என முன்னெச்சரிக்கை காரணமாகவே அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

flood234.jpg.pagespeed.ic.fpz4NGyMMn

திருநெல்வேலியில் கொடுமுடியாறு அணை நிரம்பியதால் அதிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர், நம்பியாற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தளவாய்புரம், ஆவரந்தலை கிராமங்களை இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் அங்குள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் முழுக் கொள்ளளவை எட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

புயலானது குமரிக் கடல் பகுதியில் இருந்து இன்று விலகிச் செல்லத் தொடங்கியது. மேலும் வலுப்பெற்ற புயல், தற்போது திருவனந்தபுரத்திற்கு மேற்கே 230 கி.மீ. தொலைவில் இருந்து மேற்கு-வடமேற்கு திசையில் லட்சத்தீவு நோக்கி நகர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

arabiansea5464

தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் ஒக்கி புயல் தீவிர புயலாக வலுவடைந்து இன்று காலை 8.30 மணியளவில் லட்சத் தீவுகள் பகுதியில் உள்ள அமினிதிவி ((Aminidivi)) தீவில் இருந்து தென்கிழக்கே சுமார் 270 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக.

லட்சத்தீவு பகுதிகளில் ஓகி மையம் கொண்டுள்ளதால் வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓகி புயல் டிசம்பர் 2 ஆம் தேதி நாளை கரையைக் கடக்கும் என்றும் அதன் பின்னர் வலுவிழக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சூறையாடிய ஓகி புயல் லட்சத்தீவுகளில் கரையைக் கடக்கும் போது மிகமிக அதிக அளவில் கனமழையாக கொட்டும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. ஓகி ஓடிப்போனாலும் தென்மாவட்ட அணைகளை நிரப்பிவிட்டு சென்றுள்ளது.

Leave a Response