தீவிர சூறாவளியாக மாறியது ‘ஒக்கி’ புயல்: லட்சத்தீவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

 30-1512034668-cyclone-ockhi-01

‘ஒக்கி’ புயல் தீவிர சூறாவளியாக மாற்றமடைந்து லட்சத்தீவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தென்கிழக்கு அரேபிய கடலில் உள்ள ‘ஒக்கி’ புயல், மினிகோயில் இருந்து 110 கி.மீ. வடகிழக்குத் திசையிலும் அமினி திவி தீவில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்குத் திசையிலும் மையம் கொண்டுள்ளது.

அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்து வரும் தினங்களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

அத்துடன் ‘ஒக்கி’ புயல் மேலும் வலுப்பெற்று அடுத்த 24 மணிநேரத்துக்குள் தீவிரமடைந்து லட்சத் தீவுப் பகுதியைக் கடக்கும்.

இதனால் அடுத்த 24 மணி நேரத்துக்கு லட்சத் தீவுப் பகுதிகளில் மழை பெய்யும். அப்போது 20 செ.மீ.-க்கும் மேல் மழை பொழிய வாய்ப்பு உண்டு. இந்த காலகட்டத்தில் கேரளா மற்றும் கர்நாடகாவின் கடற்கரையோரப் பகுதிகளில் மழை பெய்யும்”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response