நாளை மகாதீப பெருவிழாவையொட்டி தீபகொப்பரை தயார் செய்யப்பட்டது!

DEC_TNJ_KARTHIGAI_DEEPAM

அண்ணாமலைாயார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடந்து வருகிறது. கார்த்திகை தீபத்தின் முக்கிய விழாவான மகா தீப பெருவிழா நாளை நடைபெற உள்ளது. அதையொட்டி, நாளை அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து, மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். அதற்கான  3,500 கிலோ நெய் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், தீபம் ஏற்றும் வெண்கலத்தால் உருவான 5 அடி உயரமுள்ள மகா தீப கொப்பரை, சீரமைக்கப்பட்டு கோயிலில் வைத்துள்ளனர்.

tiruvannamalai343-600-jpg

மகா தீபம் ஏற்ற திரியாக பயன்படுத்தும் ஆயிரம் மீட்டர் துணியை, உபயதாரர்கள் நேற்று அண்ணாமலையார் கோயிலில் வழங்கினர். அதையொட்டி, பல்லக்கில் கொண்டுவரப்பட்ட திரிக்கு, அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மகா தீப கொப்பரைக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு அண்ணாமலையார் கோயிலி–்ல் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மலை உச்சிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Tamil_DailyNews_5209881067277

சுமார் 200 கிலோ எடையுள்ள தீப கொப்பரையை, தோளில் சுமந்தபடி மலை உச்சிக்கு கொண்டு சேர்க்க உள்ளனர். நாளை அதிகாலை நெய் மற்றும் திரி மலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். மகா தீபத்திற்கான நெய் காணிக்கையை ஏராளமான பக்தர்கள் கோயிலில் செலுத்தி வருகின்றனர்.

அதற்காக, நெய்குட காணிக்கை சிறப்பு பரிவுகள் திட்டிவாசல், 3ம் பிரகாரம், 4ம் பிரகாரங்களில் தொடங்கப்பட்டுள்ளன. மகா தீபத்திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கோயில் மற்றும் கிரிவலப்பாதை முழுவதும் அதி நவீன சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ளனர்.

Leave a Response