வட்டி என்னவோ 3.5% தான்! ஆனால் க்ளியரன்ஸ் வராது!! சொத்து அபேஸ்!!!

IMG-20171128-WA0044
வட்டி என்னவோ 3.5% தான்! ஆனால் க்ளியரன்ஸ் வராது!! சொத்து அபேஸ்!!!

தலைப்பை பார்த்தவுடன் என்னவோ சினிமா கதையோ அப்பிடினு தோணும். சினிமா என்பது உண்மைதான், ஆனால் இது கதையல்ல, நிஜம்.

சமீபத்தில் தமிழ் திரையுலகில் அதிகமாக பேசப்பட்டுவருவது நடிகர், தயாரிப்பாளர் சசிகுமார் அவர்களின் உறவினர் அஷோக்குமாரின் தற்(கொலையும்), தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறக்கும் அன்புச்செழியனின் அன்பில்லா பைனான்சும் தான். சுமார் 20 ஆண்டு காலங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் உலாவருபவர் தான் இந்த அன்புச்செழியன். மதுரையை சொந்த இடமாக கிந்த அன்புச்செழியன் தன்னுடைய சொந்த ஊரில் வியாபாரிகளுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து தண்டல் வசூலித்து வந்தார். அந்த காலகட்டத்தில் தனக்கென்று பைனான்சர் என்ற ஒரு முத்திரையை வங்கிக்கொண்டார். பிற்காலத்தில் கொடுத்த பணத்தை அடித்து வாங்கும் பைனான்சர் என்று தன்னுடைய கெத்தை உயர்த்திக்கொண்டார். இந்த காலகட்டத்தில் தனக்கென்று ஒரு அடியாட்கள் படையை உருவாக்கி கொண்டார். இந்த அடியாட்கள் அன்புச்செழியனை ஒரு தாதாவை போல் சித்தரித்தனர். அதுவே மக்கள் மத்தியில் பதிய ஆரம்பித்தது.

90 காலகட்டத்தில் அன்புச்செழியனின் பைனான்ஸ் பயணம் மதுரையிலிருந்து சென்னையை நோக்கி அதுவும் சினிமா துறையை நோக்கி புறப்பட்டது. ஆரம்பத்தில் படங்களை வாங்கி விநியோகிக்க ஆரம்பித்தார். அதன் மூலம் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், நடிகர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என்று திரை துறையை சேர்ந்த அணைவருடனான பழக்கங்கள் ஏற்பட்டது. எல்லாம் சும்மா கிடையாது, ஆரம்பத்தில் அப்பப்போ அன்புச்செழியன் திடீர் பணம் உதவி செய்தது தான்.

அட நமக்கு அர்ஜெண்ட்டுக்கு பணம் உதவுகிறாரே, சரி படம் பண்ண கேட்போம் என்று தயாரிப்பாளர்கள் சிலர் அவரிடம் பணம் கேட்டு படையெடுத்தனர். அன்புச்செழியனை நோக்கி வந்து கடன் கேட்டவர்கள் அனைவருக்கும் பணம் கடனாக கொடுக்கப்பட்டது. சும்மா கேட்பவர்களுக்கெல்லாம் பணம் கொடுத்து உதவுவதற்கு அன்புச்செழியன் என்ன அவ்வளவு நல்லவரா அப்பிடினு நீங்க யோசிப்பது சரி தான். கடன் வாங்கும் போது நீட்டுகிற இடமெல்லாம் கையெழுத்தை தாராளமாக போட்டவர்கள் தான் அனைவரும். கடன் வாங்கிய சிலர் குறிப்பிட்ட நேரத்தில் பணத்தை கொடுத்து விடுவர், சிலர் பணம் தான் கைக்கு வந்துடுச்சுல பொறுமையா கொடுப்போம் அப்பிடினு இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை.தேடி அலைந்தவர் தான் இந்த அன்புச்செழியன். காரணம் பைனான்ஸ் நடத்தவது சுலபமில்லை. அதற்கு மூலதனம் பணம் மட்டும் கிடையாது, கடன் வாங்குபவரின் பயமும் மிக முக்கியம். விஷயத்துக்கு வருவோம் இப்போ! சினிமா படம் எடுக்கிறேன் அப்பிடினு பணம் வாங்கிட்டு கொடுக்காமல் டகாய்ட்டி வேலை காட்டுபவர்களுக்கு முதலில் அன்புச்செழியன் போனே செய்து நாசுக்காக திட்டுவார், பிறகு ஆபாசமாக திட்டுவார். அதற்கும் சரிப்பட்டு வரவில்லை என்றால், வீட்டுக்கு அவருடைய அடியாட்களை கடன் வாங்கியவன் வீட்டில் பெண்கள் இருக்கும் நேரத்தில் அனுப்பி பணம் கேட்டு அசிங்கப்படுத்துவார். இப்படி நேர்ந்தவுடன் பணம் வாங்கியவனுக்கு பயம் கொஞ்சம் வரும், இந்த விஷயம் அன்புச்செழியன் ஆட்கள் மூலமாகவே வெளியில் பரப்பி விடுவார்கள். அப்போது தான் மற்றவர்களுக்கு எவர் மீது பயம் என்றொன்று வரும்மேன.

இந்த விஷயம் காவல்துறைக்கோ அல்லது சினிமா சங்கங்களுக்கோ பஞ்சாயத்துக்கு சென்றாலும் அவர் தைரியமாக இருப்பார், காரணம் அவர் வட்டி விகிதமோ 3.5% டு 4% தான். அன்புச்செழியன் நல்லவர்ப்பா என்று பஞ்சாயத்தை பேசி, கடன் வாங்கியவன் பணத்தை கொடுக்க வைப்பார் இந்த அன்புச்செழியன். நீங்க நினைக்கிறது புரியுது, அன்புச்செழியன் வட்டி ரொம்ப கம்மி தான் அப்பிடினு! ஆனால் இந்த வட்டி பிரச்சனை கிடையாது. அம்புசெழியன் பைனான்ஸ் வட்டி குட்டி போடும் என்பது தான் நிதர்சன உண்மை.

உதாரணத்திற்கு ஒருவர் அன்புச்செழியனிடம் படம் தயாரிக்க ஒரு கோடி வாங்கினால், அதற்கு 3.5% மாத வட்டி என்றால், மாதம் சுமார் 3.5 லட்சம் ரூபாய் வட்டியை கடன் வாங்கியவன் கட்டவேண்டியது அவசியம். ஒரு திரைப்படத்தை தயாரித்து வெளியிட குறைந்தது ஒரு வருடம் ஆகிவிடும். ரூபாய் ஒரு கோடி கடன் வாங்கிய பைனான்சர் ஒரு வருடத்துக்கு மாத வட்டி 3.5 லட்சம் × 12 மாதம் = 42 லட்சம் வட்டி மற்றும் அசல் 1 கோடி என மொத்தம் 1 கோடி 42 லட்சம் மட்டும் தான் கட்ட வேண்டும் என்று நினைப்போம். கடன் வாங்கியவர் படம் ரிலீஸ் ஆனால் தான் அவரால் அந்த வட்டி பணத்தையே கட்ட முடியும். அவரும் படத்தை விற்று கட்டிவிடலாம் என நினைத்திருப்பார். அது தான் இங்கு கிடையாது.

ஒரு மாத வட்டியான ரூபாய் 3.5 லட்சத்திற்கு 3.5% வட்டி சேர்கிறது. முதல் மாத வட்டி கடன் வாங்கியவனிடம் திரும்பின்கட்டும் வரை வந்து சேரும். இங்கு வட்டிக்கு வட்டி கொடுப்பது அவசியம். இதை பணம் வாங்கும் போது தெரிந்தோ தெரியாமலோ.வாங்கி விடுகின்றனர். அந்த காலத்து பழமொழி ஒன்று உண்டு…”வட்டிக்கு ஆட்டிகை வாங்கி, அட்டிகையை விற்று வட்டியை மட்டும் தான் கட்டினான்”. இது போல் தான் அன்புச்செழியனிடம் பைனான்ஸ் வாங்கியவர்களுடைய நிலையும்.

அன்புச்செழியனிடம் பைனான்ஸ் வாங்க சென்றால் பல வெள்ளை தாள்களிலும், காசோலைகளிலும் கையொப்பமிட்டு கொடுக்க வேண்டியது அவசியம். அதில் வீட்டு பத்திரம், நில பத்திரம் என பல அடங்கும். உதாரணாதிர்க்க்காக, மேலே சொன்ன அந்த ஒரு கோடி கடன் வாங்கிய தயாரிப்பாளர் சரியாக 12 மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்வதாக இருந்தால் கடன் வாங்கியவர் அசல் பணம் ரூபாய் 1 கொடியும், 12 மாதத்திற்கான வட்டி சுமார் 51 லட்சம் என மொத்தம் ரூபாய் 1 கோடி 51 லட்சம் கொடுத்தால் தான் அவரால் படத்தை வெளியிட முடியும். இன்னும் நாட்கள் தள்ளிக்கொண்டு வந்தால் இன்னும் வட்டி குட்டி போடும்.

கடன் வாங்கிய தயாரிப்பாளர் சொன்ன தேதியில் வட்டியும் அசலும் காட்டவில்லை என்றால் அவருடைய படத்தை அன்புச்செழியன் ஒரு அடிமட்ட விலைக்கு எடுத்துக்கொண்டு படத்தை வெளியிடுவார். அப்போதும், “நஷ்டம் வந்துவிட்டது, படம் சரியாக அமையவில்லை நீங்கள் இன்னும் எனக்கு வியாபார நஷ்டஈடு தரவேண்டும்” என்பர். கடன் வாங்கியவர் அன்புச்செழியன் எங்கே பணம் கேட்டு மீண்டும் குடைச்சல் கொடுப்பாரா என பயந்து, அவர் அன்புச்செழியனிடம் கொடுத்த பத்திரங்கள், கையொப்பமிட்ட வெத்து தாள்கள் மற்றும் காசோலைகளை கேட்க தயங்குவார்கள்.

நஷ்டப்பட்ட, அன்புச்செழியனிடம் கடன் வாங்கிய அந்த தயாரிப்பாளர் மீண்டும் வேறு ஏதாவது பைனான்ஸ் ஏற்பாடு செய்து படம் தயாரித்தால், ரிலீஸ் தருவாயில் மீண்டும் அந்த அன்புச்செழியன் விளையாட்டுக்குள் வருவார், அந்த தயாரிப்பாளர் தனக்கு பழைய பாக்கி வைத்துள்ளார் என ஒரு பஞ்சாயத்தை கூட்டுவார். இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் அந்த தயாரிப்பாளருக்கு பெரு நஷ்டம் ஏற்படும். அப்போது தான் அந்த தயாரிப்பாளர் அன்புச்செழியன் தொல்லை ஒழிந்தால் போது என்று அவருடைய சொத்துக்கள் எதையாவது அம்புசெழியனுக்கு கிராயம் செய்து கொடுப்பார். அப்படி அபேஸ் செய்யப்பட்ட சொத்துக்கள் சென்னையில் சரி, வேறு ஊர்களிலும் சரி அன்புச்செழியனுக்கு பல உண்டு.

இந்த நிலைமைக்கு தள்ளப்படும் விரக்தியடைந்த சில தயாரிப்பாளர்கள் அல்லது தயாரிப்பு நிர்வாகிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இன்று அன்புச்செழியனுக்காக வக்காலத்து வாங்கும் தயாரிப்பாளர்களும் சரி, அவரை தைரியமாக எதிர்க்கும் தயாரிப்பாளர்களும் சரி 90% பேர் அன்புச்செழியனிடம் கடன் வாங்கியவர்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அன்புச்செழியனுக்கு வக்காலத்து வாங்குபவர்களில் சிலர் அன்புச்செழியன் கட்டாயத்தின் படி நிர்பந்திக்கப்பட்டு அவருக்கு ஆதரவாக குரல் எழுப்புவதாக ரொம்ப நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. அதே போல் ஆதரவு அளிக்கும் சிலர் நம் மீது பிற்காலத்தில் அன்புச்செழியன் கரிசனம் காட்டுவார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆதரவாளர்களில் ஒரு சிலர் அன்புச்செழியனிடம் சேதாரமின்றி தப்பித்து வந்தவர்கள் தான். அன்புச்செழியனை எதிர்க்கும் விஷால், ஞானவேல்ராஜா, சசிகுமார், ஆகியோர் அன்புச்செழியன் திரைப்படம் தயாரிக்க உதவுவது உண்மை தான் ஆனால் அவருடைய வசூலிக்கும் விதம் மிகவும் தவறு என்று கண்டிக்கின்றனர். அது மட்டுமின்றி அன்புச்செழியனுக்கு எதுராக குரல் எழுப்பும் இவர்கள் அனைவரும் படித்தவர்கள், இளைஞர்கள், கணக்கு வழக்குகளை புட்டு..புட்டு வைப்பவர்கள். அன்புச்செழியன் வசூலிக்க திமிர் வட்டியை நன்கு அனுபவித்தவர்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க வாய்ப்பில்லை. இவர்கள் பட்ட கசப்பான அனுபவங்கள் போல் அசோக்குமார் அனுபவித்துவிட்டு, தற்கொலையை நோக்கி சென்றுள்ளார். எனவே மீண்டும் தமிழ் திரையுலகில் இத்தகைய ஒரு துயர சம்பவம் ஏற்படக்கூடாது என்பதில் திட்டவட்டமாக உள்ளனர் விஷால் அண்ட் டீம். இதை பொல் தான் அன்புச்செழியனிடம் கடன் வாங்கியதில்லை என்று சொல்லும் அமீர் மற்றும் கரு.பழனியப்பனும், அன்புச்செழியன் போன்ற கன்மறைவு வட்டி வசூலிப்பவர்கள் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

தயாரிப்பாளர்கள் நன்றாக சுதாரித்து கொண்டுள்ளனர், இனி அன்புச்செழியன் கொடி தமிழ் திரையுலகில் பறக்குமா அல்லது கிழித்து எரியப்படுமா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்!

இப்போது புரிகிறதா “வட்டி என்னவோ 3.5% தான்! ஆனால் க்ளியரன்ஸ் வராது!! சொத்து அபேஸ்!!!” என்று ஏன் தலைப்பை வைத்தோம் என்று.

Leave a Response