நடிகை ஜாேதிகா, இயக்குநர் பாலா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!

81273ef9-625b-480b-abbc-f834151f89ee

‘நாச்சியார்’ படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் கேரக்டரை இயக்குநர் பாலா உருவாக்கியுள்ளார். அந்த கேரக்டரில், நடிகை ஜாேதிகா நடித்துள்ளார். இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி, பாண்டியன் என்பவர் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இயக்குநர் பாலா, வித்தியாசமான கதையம்சம்காெண்ட, சர்ச்சையை ஏற்படுத்தும் கருவை மையமாகக்காெண்ட படங்களைத் தாெடர்ந்து இயக்கிவருகிறார். இவர் இயக்கிய முந்தைய படமான ‘பரதேசி’யில் நடித்த நடிகர்களை உண்மையாக அடித்துத் துவைப்பதுபாேன்ற வீடியாே வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. அந்த வகையில்தான், அவர் தனது அடுத்த படமாக ‘நாச்சியார்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தில்தான் சர்ச்சையுள்ள கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும், பெண்களை இழிவுபடுத்தும்விதமான காட்சி அமைப்புகளையும் கருத்துகளையும் வைத்திருப்பதாக, கரூரைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் தனது வழக்கறிஞர் ராஜேந்திரன் மூலம் கரூர் ஜே.எம் 2 நீதிமன்றத்தில் வழக்குத் தாெடர்ந்துள்ளார். அதில், ‘பெண்களை இழிவாகச் சித்திரித்துப் படம் இயக்கிய இயக்குநர் பாலா மீதும், அந்தப் படத்தில் சர்ச்சையான கேரக்டரில் நடித்துள்ள நடிகை ஜாேதிகா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; பெண்களை இழிவுபடுத்தும் ‘நாச்சியார்’ படத்துக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இந்த மனுமீதான விசாரணை, வரும் 29-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதி கற்பகம் அறிவித்தார்.

நடிகை ஜோதிகா, இயக்குநர் பாலா மீது ஏற்கெனவே மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ராஜன் என்பவர், மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response