விரைவில் இந்தியிலும் ஜிவி பிரகாஷ் !

g.v.

தமிழ் சினிமா நடிகர்களில் தற்போதைக்கு மிகவும் பிஸியாக இருக்கிறவர் ஜி.வி.பிரகாஷ். ‘சர்வம் தாளமயம்’, ‘ஐங்கரன்’, ‘4ஜி’, ‘அடங்காதே’, ‘குப்பத்துராஜா’, ‘செம’, ‘100% காதல்’ என அவரது கால்ஷீட்டில் பல படங்கள் காத்திருக்கின்றன.

அடுத்த 2019 டிசம்பர் வரை ஜி.வி.பிரகாஷிடம் வேறு படங்களில் நடிப்பதற்குத் தேதிகள் இல்லை. இந்த நிலையில் அவரை இந்தி படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்.

பாலா இயக்கிய ‘நாச்சியார்’ படத்தைப் பார்த்த அனுராக் காஷ்யப், ஜி.வி.பிரகாஷ் நடிப்பை பாராட்டி மகிழ்ந்தார். ‘உங்களுக்கு ஏற்ற மாதிரி ஒரு கதை வைத்திருக்கிறேன். இந்திக்கு வாருங்கள் சேர்ந்து பணியாற்றலாம்’ என்று அழைத்திருக்கிறார்.

‘இப்போது தமிழில் நிறைய படங்கள் கமிட் ஆகியிருக்கிறேன். அவற்றை முடித்துவிட்டு பாலிவுட் வருகிறேன்’ என்று ஜி.வி.பிரகாஷும் அனுராக் காஷ்யப்புக்கு பதில் கூறியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இந்தி படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response