கோஹ்லிக்கு ரெஸ்ட் இந்திய அணிக்கு இரண்டு கேப்டன்!

virat-kohli

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து கோஹ்லி தொடர்ந்து ஓய்வு இல்லாமல் விளையாடி வருகிறார். அதுவும் கடந்த சில வாரங்களாக இலங்கை தொடர், ஆஸ்திரேலிய தொடர், நியூசிலாந்து தொடர், மீண்டும் இலங்கை தொடர் என விளையாடி வருகிறார். இந்த நிலையில் கோஹ்லி இந்திய கிரிக்கெட் வாரியமான் பிசிசிஐயிடம் விடுமுறை கேட்டு விண்ணப்பித்து இருந்தார். உடலுக்கு ஓய்வு வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தார்.

கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்படாமல் இருந்தது. இதனால் கோஹ்லி பிசிசியிடம் சண்டைக்கு சென்றார். மேலும் ”தொடர்சியாக பல போட்டிகள் விளையாடுகிறோம். உடலை சரியாக கவனிக்க முடியவில்லை. உடலுக்கும் மனதுக்கு ஓய்வு வேண்டும்” என்று பிசிசிஐ குறித்து கோபமாக பேசி இருக்கிறார். இவரின் இந்த கருத்துக்கு கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

 

bcci

rohit-rahaneகோஹ்லியின் இந்த கோரிக்கையை பிசிசிஐ தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி கோஹ்லி மீதம் இருக்கும் இலங்கை தொடரில் கலந்து கொள்ள மாட்டார். இதன் காரணமாக டெஸ்ட் போட்டிக்கும் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கும் தனித்தனி கேப்டன்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். கோஹ்லியின் இடத்தில் தமிழ்நாட்டை சேர்த்த விஜய் ஷங்கர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார். ஒருநாள் போட்டியில் இன்னும் யாரை மூன்றாவது பிளேயராக இறங்குவார்கள் என்று முடிவு செய்யப்படவில்லை.

விராட் கோஹ்லிக்கு ஒய்வு கொடுக்கப்பட்டு உள்ளதால் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட இருக்கிறார். இலங்கைக்கு எதிராக மீதம் இருக்கும் 3வது டெஸ்ட் போட்டி அவர் தலைமையின் கீழ் நடக்கும். இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பார் என முடிவாகியுள்ளது. இனி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஜனவரியில் நடக்க இருக்கும் போட்டியில் விளையாடவே கோஹ்லி அணிக்கு திரும்புவார்.

Leave a Response