கவுதம் கார்த்திக் தான் உண்மையான ‘இந்திரஜித்’- திரைப்பட விமர்சனம்!

indirajith

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கவுதம் கார்த்திக், தனக்குரிய துறுதுறுப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். கௌதம் கார்த்திக் என்றாலே சிரிக்காமல் இரட்டை அர்த்த வசனம் பேசி, ரசிகர்களை சிரிக்க வைக்கும் நாயகன் என்று அவர், சமீபத்தில் வெளியான ஒரு படம் மூலம் பெயரெடுத்துள்ளார். சரி இந்த படத்தை பார்ப்போம். படத்தில் சொனாரிகா பதோரியா, அஷ்ரிதா ஷெட்டி இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும், அவர்களுடன் ரொமென்ஸ் செய்யும் வாய்ப்பு குறைவாக உள்ளது. சொனாரிகா முதல் சில காட்சிகளிலும், அஷ்ரிதா ஷெட்டி கவுதம் கார்த்திக் குழுவினருக்கு உதவி செய்யும் பெண்ணாக வருகிறார்.

தமிழ் சினிமாவில், சாகச பயனம்(அட்வென்ட்சர்ஸ்) கதைக்களத்தை தற்போது யாரும் எடுப்பதில்லை. புதையல் தேடிப் புறப்படும் பல கதைகள் தமிழில் வெளிவந்திருந்தாலும், ஹாலிவுட் படங்களைப் போல எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஹாலிவுட் திரைப்படங்களே அதிகளவில் சாகச பயணத்தை வைத்து எடுக்கப்படுகிறது. ஆனால், ‘இந்திரஜித்’ படம் சிறந்த ஆக்ஷன் அட்வென்ச்சர் படமாக உருவாகியிருக்கிறது.

inthirajith

புதையல் தேடும் கதையை அறிவியல் ரீதியாக மாற்றி பேன்டஸியாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கலா பிரபு. கிராபிக்ஸ், VFX காட்சிகள் ரசிக்கும் படி உள்ளது. பல காட்சிகள் பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது. உதாரணத்திற்கு அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மலைகளில் எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் கண்ணுக்கு விருந்தாக அமைந்துள்ளது. படம் ஆரம்பம் முதல் க்ளைமாஸ் காட்சி வரை விறுவிறுப்பாக செல்லும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. முதல் பாதியில் வரும் காதல் காட்சிகள் சற்று பிடிப்பில்லாமல் இருப்பது படத்துக்கு மைனஸ். சண்டை காட்சிகள் கொஞ்சம் ஸ்பீடாக இருந்திருந்தால் சற்று ப்ளஸ்ஸாக இருந்திருக்கும்.

இப் படத்தை கலா பிரபு இயக்க கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாகவும், சோனாரிகா படோரியா, அர்ஷிதா ஷெட்டி கதாநாயகிகளாகவும், சுதான்சு பாண்டே வில்லனாகவும், சட்சின் கட்கர், நாக பாபு, சபரி, எம்.எஸ்.பாஸ்கர், ஹன்கூர் சிங், இலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

Leave a Response