விநாயகர் சதுர்த்தியில் ரிலீஸாகும் நரகாசூரன்..!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அர்விந்த் சாமி, சந்தீப், இந்திரஜித், ஸ்ரேயா, ஆத்மா பாட்ரிக், ஆத்மிகா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘நரகாசூரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கெனவே ஒரு முறை அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தள்ளிப்போனது.

சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்றிருக்கும் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஷ்ரத்தா என்டர்டெயின்மென்ட்’ சார்பாக பத்ரி கஸ்தூரி தயாரிக்கும் ‘நரகாசூரன்’ படம் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு செப்டம்பர் 13ஆம் தேதி ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சிவகார்த்திகேயனின் சீமராஜா, விஜய்சேதுபதியின் ‘96’, சமந்தாவின் ‘யு டர்ன்’ போன்ற படங்களும் இதே தேதியில் வெளியாகவிருப்பதால் விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினம் சினிமா ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response