காஷ்மீர், இமாச்சலில் தொடங்கியது பனிப்பொழிவு!

 காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.

இந்தியாவின் வட மாநிலங்களில் பனிக்காலம் தொடங்கியுள்ளது. காலை நேர வெப்பநிலை மிக குறைவாக இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.

குறிப்பாக காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் வெப்பநிலை உறை நிலைக்கு சென்றுள்ளது.

கார்கில் பகுதியில் இரவு நேர வெப்ப நிலை மைனஸ் 6 டிகிரியாக பதிவாகிறது. லே நகரில் தொடர்ந்து மூன்று நாட்களாக மைனஸ் 6.4 டிகிரி வெப்ப நிலை காணப்படுகிறது.

இதேபோல் இமாச்சல பிரதேசத்தில் ஸ்பிட்டி மற்றும் லாஹவுல் மாவட்டங்களில் இன்று காலை பனிபொழிவு அதிகமாக இருந்தது. சாலைகளில் 25 செ.மீ அளவிற்கு பனி மூடியதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Leave a Response