காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: 4 தீவிரவாதிகள் பலி

காஷ்மீரின் தெற்கு பகுதியில் ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையே நடத்த துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் பலயாகினர்,

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) கூறும்போது, “காஷ்மீரின் தெற்கு பகுதியிlலுள்ள  வனப் பகுதியில்   நேற்றிரவு தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார்.” என்றனர்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆயிரங்கணக்கான பொதுமக்கள்  எங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

முன்னதாக திங்கட்கிழமை காஷ்மீரின் ஹத்வாரா பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளில் தலைமை கமாண்டர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி பல தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர் என்று போலீஸார் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

 

Leave a Response