காஷ்மீர் கவலைக்கிடம் அதாவது இந்திய எல்லை ஆகிய காஷ்மீரில் கடந்த 1-ம் தேதி அன்று பாகிஸ்தான் ராணுவம் இந்திய பாதுகாப்பு எல்லை சாவடிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தியது.
இத்தாக்குதலில் நம் இந்திய படை ராணுவ இளநிலை அதிகாரி பரம்ஜீத்சிங், எல்லை பாதுகாப்பு படையின் தலைமை காவலர் பிரேம் சாகர் ஆகியோர் உயிரிழந்தனர். பின்னர் இவர்களின் உடல்களை கைப்பற்றிய பாகிஸ்தான் ராணுவத்தினர் 2 பேரின் தலையை துண்டித்ததுடன் உடலையும் சிதைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தக்க நடவடிக்கை மற்றும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு பாடம் புகட்டுவோம் என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது.
காஷ்மீரில் 2 இந்திய வீரர்களின் தலையை பாகிஸ்தான் ராணுவம் துண்டித்து உடலை சிதைத்தது மிகவும் கொடூரமானது என இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இன்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல்பாசித்தை நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது குறித்து அவரிடம் சம்மன் வழங்கப்பட்டது.