போயஸ்கார்டன் சோதனை முடிந்தது!

26-1482736216-poes-garden

 சென்னையில் முன்னாள் முதல்வர் ஜெ., இல்லத்தில் நடந்த சோதனை இன்று அதிகாலை 2 மணியளவில் நிறைவடைந்தது. பல சர்ச்சைகளை இந்த சோதனை ஏற்படுத்தி உள்ளது.
ஜெ., இல்லத்தில் 4 மணி நேரம் நீடித்த சோதனை அதிகாலை 2 மணியளவில் நிறைவு பெற்றது. ஜெ., அறையில் சோதனை நடத்த, சசிகலா தரப்பினர் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கவில்லை.

போயஸ் கார்டனில் ஜெ., வாழ்ந்த வேதா இல்லத்தில் நேற்றிரவு (17ம் தேதி), வருமான வரித்துறையினர், அதிரடியாக சோதனை நடத்தினர்.
ஜெ., வீட்டில் சோதனை நடக்கும் தகவல் தெரிந்ததும், இரவு, 10:30 மணிக்கு விவேக், அலறியடித்து அங்கு ஓடி வந்தார். தகவலறிந்து தொண்டர்களும் குவிந்தனர். அப்போது மோடி ஒழிக என்று கோஷம் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது,

poes_garden_11306_11375 (1)இந்த சோதனை நான்கு மணி நேரம் நீடித்தது. அதிகாலை சுமார் 2 மணியளவில் சோதனை நிறைவு பெற்றது. இந்நிலையில், ஜெ., அறையில் சோதனை நடத்த அனுமதிக்கவில்லை என விவேக் தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் பூங்குன்றன் அறையில்தான் சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனைக்கு பற்றி விவேக் கூறியதாவது:

ஜெயலலலிதா வாழ்ந்த வீடு கோவில் போன்றது. இங்கு சோதனை நடத்தியது வேதனை அளிக்கிறது. ஜெயலலிதா அறையில் சோதனை நடத்த நாங்கள் அனுமதிக்கவில்லை. சில கடிதங்கள், 2 பென் டிரைவ், ஒரு லேப்டாப்பை அதிகாரிகள் எடுத்து சென்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Response