பயனாளிகளுக்கு விரைவில் பட்டா வழங்க வேண்டும்- மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகி!

malaivazh-makkalukku-iyarkai-vivasaya-payirchi-3

தமிழகத்தில் 36 வகையான பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் முதுவார்கள், புலையர்கள் இனத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பெரும்பாலானோர், ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால், நிலத்துக்கான உரிமை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மலைவாழ் மக்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறும்போது:-

‘தமிழகத்தில் சுமார் 8 லட்சம் மலைவாழ் மக்கள் உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட 2006 வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தி இருந்தால், ஒவ்வொருவருக்கும் 9.88 ஏக்கர் நிலம் கிடைத்திருக்கும்.பல ஆண்டுகளாக விவசாயம் செய்துவரும் நிலத்துக்கான உரிமை இல்லாததால், பயிர்க் கடன் உட்பட அரசின் எந்தவித உதவியும் கிடைப்பதில்லை.

தற்போது நிலத்தை அளவீடு செய்யும் பணி தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இப்பணிகளை விரைந்து முடித்து, பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும்’ என்றார்.

மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பி.சக்திவேல் கூறும்போது:-

‘உடுமலை கோட்டத்தில், இதுவரை மலைவாழ் மக்கள் 1098 பேரிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளன. கோயில் மற்றும் சமுதாயக் கூடம் ஆகியவற்றுக்காக 15 மனுக்களும் பெறப்பட்டுள்ளன. இவற்றை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பட்டா வழங்கப்படும்’ என்றார்.

vana

இதற்கிடையே மேல்குருமலை முதல் திருமூர்த்தி மலை, குழிப்பட்டி முதல் பொன்னாலம்மன்சோலை, மாவடப்பு முதல் ராவணாபுரம் வரை மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி செய்து தர தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Response