தமிழ்நாட்டில் கடந்த ஒருவாரமாக வடகிழக்கு பருவமழை பெய்து வந்தது. இந்த மழை காரணமாக சென்னை, கடலூர், திருவள்ளூர், டெல்டா மாவட்டங்கள் என பல பகுதிகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டது.
பல இடங்களில் இதனால் வெள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த நான்கு நாட்களாக தமிழ்நாட்டில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வந்தது.
நேற்று பல இடங்களில் வெயில் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் மாலை நேரத்தில் லேசான சாரல் மழை பெய்தது.
இந்த நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று உருவானது. தற்போது இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி இருக்கிறது. இது நிமிடத்திற்கு நிமிடம் வலுவடைந்து கொண்டே செல்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.