மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுவது அறிவை வளர்த்துக்கொள்ள தான் படம் பார்பதற்கு அல்ல; தம்புதுரை அறிவுரை !

thambi
மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை, 2011ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் மாணவ, மாணவிகளுக்கு மடிகணினி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கரூரில் மாவட்டத்தில் சின்னதாராபுரம், பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினர்.

அப்போது பேசிய தம்பிதுரை:-

“மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுவது அறிவை வளர்த்துக்கொள்வதற்காகவே. மெர்சல், பிக் பாஸ் திரைப்படங்கள் பார்ப்பதற்கு லேப்டாப் வழங்கப்படவில்லை. அதை பார்த்தாலும் ஒரு பிரயோஜனமுமில்லை” என்று அறிவுரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை:-

கரூர் மாவட்டத்தில் இதுவரை 9 கோடி ரூபாய் மதிப்பிலன விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு சிலர் மடிக்கணினி தரப்படாது என்ற தவறான கருத்தை மக்களிடம் பரப்பிக் கொண்டிருந்தனர். ஆனால், ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அம்மா ஆட்சி சிறப்பாக செயல்படுத்தப்படுவதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும் என்றார்.

Leave a Response