தமிழகத்தில் மீண்டும் கன மழை வரும்- வெள்ளச்சேதம் ஏற்படும்!

rain-chennai999558

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

பலத்த மழைக்கு வாய்ப்பு:-

இதனிடையே வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வினால் தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், பல இடங்களில் பலத்த கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain-sat-img4

அந்தமானில் காற்றழுத்த தாழ்வு

நவம்பர் 7ம் தேதி அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் அந்தமான் நிகோபர் தீவுகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

vanilai12

வெள்ளச்சேதம் அதிகமாகுமோ?

சென்னையில் கடந்த ஞாயிறு முதல் விட்டு விட்டு பெய்து வரும் பலத்த மழையால் புறநகர் பகுதிகள் 5 நாட்களாக வெள்ளத்தில் மிதக்கின்றன. வெயிலடித்தால் மட்டுமே தண்ணீர் வடிய வாய்ப்பு உள்ளது. நவம்பர் 7 முதல் மழை நீடித்தால் புறநகரில் பல பகுதிகளுக்குள் தண்ணீர் புக வாய்ப்புள்ளது.

Leave a Response