வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி!

modi

ராஜஸ்தான், குஜராத், ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ள அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது. நீர்நிலைகள் நிரம்பி வழிவதால் தாழ்வான பகுதிகள் வெள்ளம் சூழப்பட்டுள்ளன. நிலைமை மோசமாக இருப்பதால் பல இடங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ஆங்காங்கே மீட்பு படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலத்திலும் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக வடக்கு குஜராத்தில்தில், பனாஸ் கந்தா என்ற மாவட்டங்களில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

kujaraath

இந்த சூழ்நிலையில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, இன்று காலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது, குஜராத்தில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளம் தொடர்பான நிலவரத்தை எடுத்துரைத்தார்.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி குஜராத் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட உள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response