சென்னையில் மழை பெய்யும்போது சேலத்தில் ஆய்வு கொள்ளும் முதல்வர்- ஸ்டாலின் ஆவேசம்!

stalin-visit

கனமழையால் தண்ணீர் தேங்கியுள்ள சென்னை ஓட்டேரி பகுதியை பார்வையிட்ட ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்திருந்த நிலையில், அப்படியான நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சென்னையில் மழை பெய்து கொண்டிருக்கும்போது முதல்வர் பழனிசாமி கண் துடைப்பிற்காக சேலத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்.

selam1

கனமழை சென்னையில் பெய்துகொண்டிருக்கும்போது சேலத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தி நாடகம் நடத்துகிறார் முதல்வர் பழனிசாமி. கனமழை பெய்துவரும் நிலையில், கொடுங்கையூரில் 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். இனியாவது  முதல்வர் பழனிசாமி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்க முடியவில்லை எனில், முதல்வர் பழனிசாமி பதவிவிலக வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Response