’விழித்திரு’ படம் தமிழ்தேச உணர்வாளர்களை ஈர்க்கும்- தொல். திருமாவளவன்

 

’விழித்திரு’ படம் குறித்து விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர்
தொல். திருமாவளவன் அவர்கள் பேசியதாவது,

“இயக்குநர் மீரா கதிரவன் அவர்களின் அரியப்படைப்பான ‘விழித்திரு’ படத்தை அண்மையில் பார்த்தேன். இந்தப்படம் மாணவர்களையும் இளைஞர்களையும் வெகுவாக ஈர்க்கும். வகையில் அமைந்திருக்கிறது. தமிழகத்தில், ஏன் இந்தியா முழுவதும் நடைபெறுகிற கௌரவக் கொலை என்னும் ஆணவக் கொலைகளை எதிர்க்க வகையில் இந்த திரைப்படத்தின் மையக்கருத்து அமைந்திருக்கிறது. ஒரு புலனாய்வு பத்திரிகையாளர் இந்த ஆணவக்கொலைகளை மையப்படுத்தி செய்தி வெளியிடுகிறார். அதற்கு காரணமாக அரசியல்வாதிகளை அம்பலம்படுத்துகிறார் என்பதற்காக அவர் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுகிறது. அதுதான் திரைப்படத்தின் மையக்கருத்தாக அமைகிறது. இந்த திரைப்படம் ஒரு இரவில் நடக்கிற நான்கு கதைகளை ஒரே நேரத்தில் பின்னிபிணைந்து செல்கிறது. நான்கு திசைகளிலிருந்து நான்கு கதைகள் தனித்தனியே பயணிக்கிறது. ஆனால் முடிவில் ஒன்றாக இணைந்து ஒரு செய்தியை மக்களுக்கு சொல்லும் வகையில் மிகச்சிறப்பாக எடுக்கப்பட்டிருகிறது.

thol thirumavalavan_4

இயக்குநர் மீரா கதிரவன் சிறந்த தமிழ் தேசிய உணர்வாளர் என்பதை இந்தப் படத்தின் மூலம் தெரியப்படுத்திருக்கிறார். படத்தில் நாயகனாக இருக்கிற பார்ப்பதற்கு முத்துக்குமார் என பெயர் சூட்டியுள்ளார். ஒரு இல்லத்துக்கு திலீபன் இல்லம் என பெயர் சூட்டியிருய்க்கிறார். இதில் தொல்லைகாட்சியிலே பேட்டிக் கொடுக்கும் பாத்திரங்களில் தமிழகத்தைச் சார்ந்த முக்கியமான உணர்களை பேசவைத்திருக்கிறார், நடிக்கவைத்திருக்கிறார். மொத்தத்தில் தமிழ் உணர்வாளர்களை இந்தப் படம் ஈர்க்கும்.

அடுத்து ஆணவக்கொலைகளை சாதிய வன்கொடுமைகளை எதிர்க்கும் ஜனநாயக சக்திகளை முற்போக்கு சக்திகளை இந்தப் படம் நிச்சயமாக் ஈர்க்கும். புதிய      தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஹாலிவுட் படங்களை பார்ப்பது போல இந்தப் படத்தை மிகச் சிறப்பாக அமைத்திருக்கிறார்கள். அதிலே குறிப்பாக ஒளிப்பதிவு, இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட படம் மிக அருமையாக ஒளிப்பதிவு அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் கண்கவர் காட்சி என்று சொல்லலாம். அதே போல் சென்னையில் பாண்டிசேரியில் எடுக்கப்பட்ட படம் என்று சொல்லமுடியாத அளவுக்கு இந்த படக்காட்சிகளுக்கான களங்களை தேர்வு செய்திருக்கிறார் மீரா கதிரவன் அவர்கள். நான் கூட படம் முடிந்தவுடன் மீரா கதிரவனிடம் இந்தப்படத்தை எங்கு எங்கு படப்பிடிப்பு தளங்கள் எல்லாம் எங்கே இருக்கிறது என்று வியப்பாக கேட்டேன். அவ்வளவு சிறப்பான கோணங்களில் இருந்து இந்தக் காட்சிகளை எல்லாம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். அதே இசை கேட்பதற்கு ரம்மியமாக இருக்கிறது. அதாவது இளைஞ்ர்களுக்கு பிடிக்கக்கூடிய வகையிலே அமைந்திருக்கிறது.

11x15-westday-4rth-69-469x640

பாடல் மற்றும் முழுநீளப்படம் அனைத்திலும் இசையமைப்பு என்பது மிகவும் கைதேர்ந்த ஒரு இசையமைப்பாளருடைய இசையாக அது அமைந்திருக்கிறது. நான் யார் இசையப்பாளர் என்றே கேட்டேன். அதற்கு புதிய அறிமுக இசையமைப்பாளர் என்று மீரா கதிரவன் அவர்கள் சொன்னார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவ்வளவு சிறப்பான முறையிலே திரைப்படத்திற்கு இசை, பாடல்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நான்கு கதைகளும் வெவ்வேறு திசைகளில் பயணத்துக்கொண்டு இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுவதால் ஒரு எதிர்பார்ப்பு, நாற்காலியின் நுனியில் அமர்ந்து பார்ப்பது போல ஒரு எதிர்பார்ப்பை ஒரு விறுவிறுப்பை படம் நமக்கு ஏற்படுத்துகிறது.
ஒரு புறம் கதாநாயகன் பாசமான தங்கையையும் தாயையும் காப்பாற்ற வேலை வந்த இடத்தில் தான் வைத்திருந்த மணிபர்ஸை ஒரு திருட்டு கும்பலிடம் பறிகொடுத்து தேடுகிறார். பிறகு ஒரு வண்டி ஓட்டுநராக வேலை செய்கிற இடத்தில் ஏதேச்சையாக புலனாய்வு பத்திரிக்கையாளர் அந்த வண்டியிலே பயணிக்கிறார், அவர் கொலை செய்யப்படுகிறார். அந்த பிணத்தோடு அவர் பயணிக்கிறது விறுவிறுப்பாக இருக்கிறது.

 

அரசியல்வாதி எப்படி இங்கே இயங்குகிறார்கள், ஆட்சி நிர்வாகம், குறிப்பாக காவல்துறை எப்படி ஆட்சியாளர்களுக்கு வேலை செய்கிறது என்பதை மிகவும் தத்துரூவமாக பதிவுசெய்திருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன் அவர்கள். காவல்துறை சட்டப்படி செயல்படுகிறார்களா? நியாயத்தை நடைமுறைபடுத்துவதற்காக இயங்குகிறார்களா என்றால் ஆட்சி விருப்பபடி செயல்படுவதற்காக மட்டுமே என்பதை மிகவும் தெளிவாக பதிவு செய்துகிறார். அவர்களுக்கு சட்டம் முக்கியம் என்பதைவிட சட்டம் ஒழுங்கு முக்கியம் என்பதைவிட பணியில் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதைவிட ஆட்சியாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். எதைச் சொன்னாலும் அதை செய்து முடிப்பதுதான் காவல்துறையின் கடமை. இது பெரும்பான்மையான உலகம் முழுவதும் இது ஒரு பொது விதியாக உள்ளது. அதை மிகத்தெளிவாக பதிவு செய்திருக்கிறார். அதிகாரம் எப்போதும் வலியது. அதனால் அந்த பத்திரிகையாளர் கொலையையும் கதாநாயகன் முத்துக்குமார் போட்டுவிடுகிறார்கள். அதன் பிறகு காவல் துறையில் எல்லோரும் கெட்டவர்கள் அல்ல, நல்லவர்களும் இருக்கிறார்கள். அப்படி ஒரு பாத்திரம் போக்குவரத்து துறையில் பணியாற்றக்கூடிய காவலர் ஒருவரை அமைத்திருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன்.
1486665019f

அவர் முத்துக்குமாரை காப்பாற்றி செல்லும்போது அவரையும் கொலை செய்கிறார்கள். காவல்துறையினரே காவல் கொலைசெய்துவிட்டு அதையும் முத்துக்குமார் செய்ததாக மீது பழி போடுகிறார்கள். ஆக ஒரு அப்பாவி இரண்டு கொலை வழக்குகளில் சிக்கிய நிலையில், இந்த சமூக கட்டயமைப்பில், அரசியல் கட்டயமைப்பில் நாம் பார்க்கிற எதார்த்தை இந்தப் படத்தில் அவர் பதி செய்திருக்கிறார். அதனால் அவனது தாயாரும் தங்கையும் எவ்வளவு எதிர்பார்ப்போடு அவன் வீட்டுக்கு திரும்பி வருவான், இந்த இரவைத் தாண்டி எப்போது வருவான் என்கிற ஏக்கத்தில் இருக்கிறார்கள். அடிக்கடி தொலைபேசியில் தங்கை அண்ணா எப்போது எப்போது வருவீர்கள் என்று அழைக்கிற அந்தக் காட்சி நம்மை நெஞ்சுருங்க வைக்கிறது. அவர் பிணமாக கிடக்கிறபோதும் அவனுக்கு தொலைபேசி வருகிறது. அந்த அழைப்பை எடுத்து அவன் இறந்துவிட்டான் என்ற செய்தியை சொல்லமுடியாமல் இன்னொரு பாத்திரம் வருவார் வருகிறேன் என்று அவனே சொல்லிவிட்டு அணைக்கிறது நமக்கே நெஞ்சு கணக்கிறது.

IMG_7064

ஆகா குடும்ப பாசம் அதிகார வர்க்கத்தின் கொடுங்கோண்மை அரசியல்வாதிகளின் மேலாதிக்கம், ஆணவம், நேர்மையாய் உழைக்கின்றவர்கள் படுகிற துன்பங்கள், ஊடகவியலாளர்களாக இருந்தாலும் சரி பொது மக்களாக இருந்தாலும் அவர்கள் படுகிற துன்பங்கள்.
ஊடகவியலாளர்கள் உண்மையை அம்பலப்படுத்தும்போதும் சந்திக்கிற துன்பங்கள், நேர்மையை உழைத்து குடும்பத்தை காப்பாற்ற நினைக்கும் போராடுகிற ஒரு இளைஞன் சந்திக்கிற பொய் வழக்குகள், அடாத பழி ஆட்சியாளர்கள் அல்லது அதிகாரிகள் செய்கிற அநீதி அரசியல்வாதிகளின் மேலாதிக்கப் போக்குகள், அப்பாவி இதனால் ஏற்படுகிற இன்னல்கள், இப்படி பல பிறச்சினைகளை மையப்படுத்தி சிறப்பாக இந்தக் கதையைப் பின்னியிருக்கிறார் மிகச்சிறப்பாக திரைக்கதை அமைத்து நெறிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன் அவர்கள். வெவ்வேறு கதைகளங்களை கொண்டிருந்தாலும் கூட குழப்பமில்லாமல் அதை நேர்த்தியாக கொண்டு சென்று, ஒவ்வொன்றும் ஒவ்வொன்றோடு தொடர்புடையதாக முடிக்கிற பாங்கு மிக அருமையாக இருக்கிறது.

_MG_2741_13531

மாணவர்கள், இளைஞர்கள் அதாவது புதிய இளம் தலைமுறையினர் விரும்பக்கூடிய வகையில் ஒரு வணிக நோக்கத்தோடு எடுக்கப்படுகிற காட்சி என்று சொல்வார்கள் வணிக நோக்கத்தோடு எடுக்கிறப்படுகிற காட்சிகளாக இல்லாமல், ஆனால் இளம் தலைமுறைகள் விரும்புகிற சில ஆடல் பாடல் காட்சிகள். அதுவும் குறிப்பாக வாட்ஸ்அப், முகநூல் இப்படி தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலக்கட்டத்தில் அதை இந்த இளைஞர்கள் கையால்கிறார்கள் அதனால் எப்படி பிரச்சினைகள் எல்லாம் என்பதையும் அவர் இதில் இணைத்திருக்கிறார். ஒரு பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்த ஒரு கதாப்பாத்திரம் அவனுக்கு வெளி உலகம் தெரியவில்லை, பணம் தான் பாதாளம் வரை பாயும் என்று நம்பிக்கொண்டிருந்த அவனுக்கு, அது தவறு என்று பாடம் புகட்டக்கூடிய அருமையான காட்சிகள் இதில் அமைந்திருக்கிறது.

 

பிறந்தநாள் விழாவை நண்பர்களோடு கொண்டாடிருந்தவன், ஒரு பேரழகியை பார்த்ததும் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு, அவளோடு இந்த ஒரு இரவைக் கழிக்கவேண்டும் என்று துடிக்கிறான். அது எவ்வளவு பெரிய இன்னலை அவனுக்கு தருகிறது என்பதை அந்த ஓர் இரவு பயணத்தில் மிக நேர்த்தியாக படம் பிடித்துக்காட்டியிருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன் அவர்கள்.
அவ்வளவு பெரிய கோடீஸ்வரன் அவன் என்றாலும் கடைசி தனக்கு ஏற்பட்டிருக்கிற அந்த இக்கட்டிலிருந்து தப்பிப்பதற்கு அதை தன் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ சொல்லமுடியாமல் தவிப்பது கடைசியில் ஒத்த ரூபாய் போட்டு பேசுவதற்கு ஒரு ரூபாய்க்கு கூட காசில்லாமல் அவன் தவிக்கிற நிலை அதற்காக பிச்சைக்காரனிடம் பிச்சை எடுக்கும்போதும் இதுதான் மனித வாழ்க்கை, எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் அவன் கடைசியில் பிச்சைக்காரனிடத்தில் பிச்சை எடுக்கும் நிலை கூட உருவாகும். மனித வாழ்க்கை எப்போது மேலே போய்கொண்டிருப்பது அல்ல அது சுற்றும் சுழல் வடிவத்தில் அமைக்கின்ற முறை, அது ஒரு சக்கரம் என்கிற உண்மைய அவர் மிக நேர்த்தியாக அழகாக பதிவுசெய்திருக்கிறார். இப்படி நான்கு வகையான பாத்திரங்கள், திருடன் – திருடி என்று இரண்டு பாத்திரங்கள், அவர்கள் மிகச் சிறப்பாக தங்களுடையப் பாத்திரங்களை செய்திருக்கிறார்கள். ஆபாசம் இல்லாமல் அந்த இரண்டு கதாப்பாத்திரங்களும் படத்தின் மிக முக்கியமான பாத்திரங்களாக அவை இருக்கின்றன.

IMG_7064

ஆனால் எந்த இடத்திலும் முகம் சுழிக்க வைக்கும் வகையில் இல்லாமல் அவர்கள் நண்பர்களாக பழகிக்கொண்டு எப்படி இந்த வாழ்க்கையை நகர்த்திருகிறார்கள் என்பதை இயக்குநர் மீரா கதிரவன் பதிவு செய்துள்ளார். எல்லாவற்றையும் விட எல்லோரையும் நெஞ்சுறுக்க வைக்கும் கதையம்சம் என்னவென்றால் தனது பார்வை தந்தையை கூடத் தள்ளிவைத்துவிட்டு தான் நேசித்த பப்பி என்கிற நாய்க்குட்டியை தேடி அலையும் குழந்தை. பள்ளி சிறுமி அது எந்த அளவுக்கு அந்த நாய்க்குட்டியைத் தன்னுடைய தங்கையைப்போல தன்னுடைய உடன்பிறந்த ஜீவனைப் போல அது நேசித்திருக்கிறது என்பதற்கு ஒரு காட்சி. அந்த நாய்க்குட்டி கழுத்திலே கட்டியிருக்கிற சத்தம் திருடனும் திருடியும் சைக்கிளில் போய்க்கொண்டிருந்த போது அவர்கள் கையிலே இருந்ததால் அந்த ஒலி பார்வை இழந்த தந்தையோடு நிற்கிற குழந்தைக்கு கேட்கிறது. அப்பா பப்பி இங்கேதான் இருக்கிறது இங்கே இருக்கிறது என்று தந்தையிமிருந்து விடுபட்டு ஓடி சைக்கிளில் சென்றுகொண்டிருந்த திருடனையும் திருடியையும் மறித்து எங்கே எங்கள் நாய்க்குட்டி என்று சண்டையிடுகிற காட்சி பப்பி எங்கே என்று அந்தக் காட்சியும் நெஞ்சை உருகவைக்கிறது.

எல்லாவற்றையும்விட மிகவும் நெருக்கடியான சூழலில் முத்துக்குமார் கதாப்பாத்திரம் அந்தக் குழந்தைக்கு உதவுகிற காட்சியும், ரேடியோ சிட்டி என்கிற அந்த பண்பலை வானொலிக்கு தகவல் கொடுத்து அதை அவன் ஊருக்கே அறிவிப்பு செய்து அதை கேட்டு அந்த பார்வை இழந்த தந்தை குழந்தை இருக்கிற இடத்திற்கு போய் மீட்டு வருகிற காட்சி இப்படி ஒவ்வொரு காட்சியுமே நெஞ்சை உருக வைக்கிறக் காட்சி. வெவ்வேறு கதையாக இருந்தாலும் அது ஒரே கதையாக முடிகிற காட்சி, என்று எந்த இடத்திலும் குழப்பமில்லாமல் தெளிவாக அதை நகர்த்திச் செல்கிறார் நம்முடைய இயக்குநர் மீரா கதிரவன் அவர்கள். இந்த ரேடியோ சிட்டியை தெரிந்துகொண்டு பேசிகிற அபிநயா என்கிற அந்தப் பாத்திரமும் இது ஒரு கற்பனை கதையல்ல சுப்ரமணி என்ற பாத்திரம் முத்துக்குமார் தான் என்று அவனுக்கு உதவுகிற காட்சி. அந்த பாத்திரத்தால்தான் போக்குவரத்து காவல்துறை அதிகாரியாக இருக்கிறவர் ஓடி வந்து முத்துக்குமாரை காப்பாற்றி இழுத்துச் செல்கிறார். இப்படி ஒவ்வொரு பாத்திரமும் அவர்களுக்கான கடமையை மனிதநேயத்தோடு செய்திருக்கிறார்கள். ஆட்சியாளர்களும் காவல்துறையும் தான் மனிதநேயத் தாண்டி அதிகாரம் ஆணவம் என்கிற நிலையை இங்கே இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை எல்லாம் படம் பிடித்து காட்டியிருக்கக்கூடிய அம்பலப்படுத்தக்கூடிய மிக அருமையான காட்சி பதிவுகளாக அனைத்தும் உள்ளன. ஒட்டுமொத்தத்தில் இயக்குநர் மீரா கதிரவன் அவர்கள் இளம் தலைமுறையினருக்கு பிடிக்கக்கூடிய வரையில் இயக்கியிருக்கிறார். வெறும் வணிக நோக்கமோ ஆபாசம் என்கிற நிலையிலோ இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து சமூகத்தில் நிலவக்கூடிய சிக்கல்களை மையக்கருத்தாக வைத்து தற்கால தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தப் படத்தை அவர் இயக்கியிருக்கிறார்.
உள்ளபடியே இது தமிழ்தேச உணர்வாளர்களை ஈர்க்கும்.

திருமாவளவன்

சாதிய வன்கொடுமைகளையும், ஆவணக்கொலைகளையும் எதிர்க்கிற ஜனநாயக முற்போக்கு சக்திகளை ஈர்க்கும், நவீன் தொழில்நுட்பத்தை விரும்புகிற புதிய இளம் தலைமுறையினரை ஈர்க்கும் நேர்மையாய் பணியாற்றவேண்டும் என்று நினைக்கிற ஊடகவிலாளர்களை ஈர்க்கும். இயக்குநர் மீரா கதிரவன் அவர்கள் இந்தப் படத்தின் மூலம் மிகச் சிறந்த இயக்குநர் என்பதை நிலைநாட்டியிருக்கிறார். அவர் மென்மேலும் பல வெற்றிப் படங்களை வழங்கவேண்டும். அவருக்கு தமிழ்ச்சமூகம் குறிப்பாக இளைஞர்கள் பேராதவு வழங்கவேண்டும். அவள் பெயர் தமிழரசி படத்துக்கு பிறகு விழித்திரு இந்த இரண்டாவது படைப்பை மிகச் சிறப்பான முறையிலே இயக்கியிருக்கிற மீரா கதிரவன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். தமிழ் சமூகம் அவரை ஏற்கவேண்டும் போற்றவேண்டும் அவருக்கு உற்றத்துணையாய் நிற்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்” என கூறியிருக்கிறார்.

Leave a Response