மலேசியா வாழ் இந்தியர்களுக்கு உதவிய சுஷ்மா !!

sus
மலேசியாவில் ஆவணங்களை தொலைத்த இந்தியர்களுக்கு சுஷ்மாவின் நடவடிக்கை காரணமாக உதவி கிடைத்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த மீரா ரமேஷ் படேல் என்பவர், சுஷ்மாவின் டுவிட்டர் பக்கத்தில், “எனது குடும்பத்தினர் மலேசியா விமான நிலையத்தில் உள்ளனர். பாஸ்போர்ட் தொலைந்துவிட்டது. வார விடுமுறை காரணமாக இந்திய தூதரகம் மூடப்பட்டுள்ளது. தயவு செய்து உதவுங்கள்” இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதனையடுத்து சுஷ்மா டுவிட்டரில், இது அவசர வழக்கு. தூதரகத்தை திறந்து, பாதிக்கப்பட்ட இந்திய குடும்பத்திற்கு உதவ வேண்டும் எனக்கூறியிருந்தார். தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரிகள், மீரா ரமேஷ் படேல் குடும்பத்தை தொடர்பு கொண்டதாகவும், அவர்களின் பிரச்னை தீர்க்கப்பட்டதாகவும் சுஷ்மாவின் டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்தனர். பாஸ்போர்ட் மாயம் இதேபோல் அனுஷா துலிபாலா என்ற மாணவர், எனது பாஸ்போர்ட் தொலைந்துவிட்டது. இதனால், எங்கும் செல்லவில்லை. உதவி தேவைப்படுகிறது. விசா பெற இந்தியா செல்ல வேண்டும்.

ஆனால், இது தேர்வு நேரம். பாஸ்போர்ட் இல்லாமல் எங்கும் செல்ல முடியவில்லை என சுஷ்மாவின் டுவிட்டரில் கூறியிருந்தார். இதனை பார்த்த அமைச்சர், மாணவருக்கு உதவும்படி அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Response