ரயில் தண்டவாளத்துக்கு குட் பாய் சொன்ன சீனா!

Virtual-Track-784x445
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பல்வேறு அதிநவீன ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்த வண்ணம் உள்ளன.
எலக்ட்ரிக் ரயில், பறக்கும் ரயில் என எத்தனை ரயில்கள் வந்தாலும் அவையெல்லாம் ஓடுவதற்கு தண்டவாளம் வேண்டும்.

ஆனால், சீனாவில் தண்டவாளமே இல்லாமல் ஓடும் ரயில் சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் சூசோவு பகுதியில் தண்டவாளங்கள் இல்லாத ரயில்சேவை இன்று தொடங்கியது. இந்த ரயில்கள் தண்டவாளங்களுக்கு பதிலாக சாலையில் உள்ள வெள்ளைக் கோடுகளை சென்சார்கள் மூலம் பின்பற்றி இயங்கும். இந்த ரயில்கள் மின்சக்தியின் உதவியுடன் செயல்படும்.
road
அதுமட்டுமல்லாமல் ஒரே சமயத்தில் 300 பயணிகளை ஏற்றிச்செல்லும் இந்த ரயில், மணிக்கு 70 கி.மீ வேகத்தில் செல்லுமாம்.

Leave a Response