சீனாவில் தேசிய கீதத்தை அவமதித்தால் 3 ஆண்டு சிறை !

jail
தேசிய கீதத்தை அவமதித்தால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில், சட்ட திருத்தம் மேற்கொள்ள, சீனஅரசு திட்டம்.

அண்டை நாடான சீனாவில், தேசிய கீதத்தை அவமதிப்பவர்ளை, 15 நாட்கள் சிறையில் அடைக்கும் வகையிலான சட்ட திருத்த மசோதா, கடந்த செப்டம்பரில், அந்நாட்டு பார்லியில் நிறை வேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த சட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், தேசிய கீதத்தை அவமதிக்கும் நபர்களுக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில், சட்ட திருத்தம் செய்ய, அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான வரைவு மசோதா, அந்நாட்டு பார்லியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:-

அரசின் அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளிலும், தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும். அது தவிர, கொடியேற்ற நிகழ்வு, விருது வழங்கும் விழா, முக்கிய நினைவு நாள், துாதரக நிகழ்வுகள், முக்கிய விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் போது, தேசியகீதம் இசைக்கப்படும். வேறெந்த, தனியார் நிகழ்ச்சிகளிலோ, துக்க நிகழ்வுகளிலோ, தேசிய கீதம் இசைக்கப்படகூடாது. தேசிய கீதத்தை வரிகளிலோ, அதன் இசையிலோ மாற்றம் செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி பாடபுத்தகங்களில், தேசியகீதம் இடம் பெறவேண்டும். தேசிய கீதத்தை பாட, மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

விதிகளைமீறி, விளம்பரங்களிலோ, வேறெந்த தனியார் நிகழ்ச்சிகளிலோ, தேசியகீதம் அல்லது அதன் பின்னணி இசையை பயன்படுத்துவோர் மீது, கைது நடவடிக்கை பாயும். அவர்கள், மூன்று ஆண்டுகள் வரை, சிறையில் அடைக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நடப்பு பார்லிமென்ட் கூட்ட தொடரிலேயே, இந்த மசோதா நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response