எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர்கள் நாளைக்குள் அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Madras-High-Court-LL-Size-min
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அனுமதி பெறாமல் வைக்கப்ப்டட பேனர்களை நாளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியில் அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்டதாக டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழக அரசு இன்று மாலை விளக்கமளித்தது. அதில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அரசு மற்றும் தனியாருக்கு 220 பேனர் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு விதிகளை மீறி வைக்கப்பட்ட பேனர்களை நாளைக்குள் அகற்றிவிட்டு, வரும் திங்கட்கிழமை (அக்.,30) அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், அதிகளவில் பேனர் வைக்கப்பட்டதால் சட்டத்திற்கு உட்பட்டு அனுமதி வழங்கவில்லை என தெரிகிறது. பேனர் விவகாரத்தில் வழக்கு மேல் வழக்கும் உத்தரவுக்கு மேல் உத்தரவும் போடுவதால் எந்த பயனுமில்லை. விதிகளை மீறி வைக்கப்படும் பேனர் விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க வேண்டியுள்ள நிலை ஏற்ப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Response