காங்கிரசுடன் கைகோர்க்கும் சரத் யாதவ்! குஜராத் தேர்தல் பிண்ணனி

saradyadav

 

ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து பிரிந்துள்ள சரத் யாதவ் அணி குஜராத் தேர்தலில் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடும் என தெரிவித்துள்ளது.
குஜராத் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 9 மற்றும் 14 தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பா ஜ க மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஏற்கனவே தீவிரமான தேர்தல் பிரசாரத்தில் இறங்கி உள்ளன. ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து சரத் யாதவ் தலைமையில் இயங்கும் அணியின் தேர்தல் நிலைப்பாடு குறித்து அணியின் தலைவர் சரத் யாதவ் தெரிவித்துள்ளார்.
அவர், “வரும் குஜராத் தேர்தலில் எங்கள் அணி காங்கிரசுடன் கை கோர்க்கும். இது குறித்து நான் ஏற்கனவே காங்கிரஸ் துணைத்தலவர் ராகுல் காந்தியுடன் பேசி உள்ளேன். அனைத்து எதிர்கட்சிகளும் உள்ளடக்கிய ஒரு கூட்டணி அமைக்க அவருக்கு யோசனையும் அளித்துள்ளேன். இவ்வாறு ஒரு கூட்டணி அமைப்பதன் மூலம் கடந்த தேர்தலில் 69% சதவிகித வாக்குகள் பெற்ற பா ஜ க தற்போது வெறும் 31% சதவிகித வாக்குகள் மட்டுமே பெற முடியும். காங்கிரசுடன் ஏற்கனவே கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை முடித்து விட்டோம்.” என தெரிவித்தார்.
சரத் பவார் தலைமையில் இயங்கு தேசிய காங்கிரஸ் கட்சி பா ஜ க வுடன் இணைவதினால் கூட்டணியில் ஏதும் மாற்றம் ஏற்படுமா எனக் கேட்டதற்கு, “கூட்டணி என்னும் வாகனத்தின் ஓட்டுனர் காங்கிரஸ் மட்டுமே. அதனால் காங்கிரஸ் மட்டுமே எந்த கட்சிகளை கூட்டணி வாகனத்தில் ஏற்றிச் செல்வது என முடிவு செய்யும்”எனக் கூறி உள்ளார்.

Leave a Response