தற்போது தமிழ்சினிமாவின் அதிகபடியான கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களை கையில் வைத்திருக்கும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் மட்டுமே.
இளம் ,புதுமுக இயக்கநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இவரை வைத்து படமெடுத்தால் நிச்சயம் குறைந்த அளவில் வெற்றியைக் கொடுத்துவிட முடியுமென நம்புவதால் தொடர்ந்து அடுத்துதடுத்த படவாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளது.
ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் , செம்ம , நாச்சியார், 100% காதல் உள்ளிட்ட படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது, இதில் ‘செம்ம’ படம் வெளியிட்டீற்கு தயார் நிலையில் உள்ளது. இது மட்டுமின்றி 4ஜி, கேடி பில்லா கில்லாடி ரங்கா-2, வெர்ஜின் மாப்ள உள்ளிட்ட படங்கள் குறித்த அறிவிப்பு முன்னரே வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷின் ‘குப்பத்து ராஜா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. எஸ் ஃபோக்கஸ் புரடக்ஷன் தயாரிப்பில் ,RS பாஸ்கர் இயக்கும் இந்த படம் டிசம்பரில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.