ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடாது: விஜயகாந்த் அறிவிப்பு .

 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடாது என தே.மு.தி.க. கட்சி தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகம் எங்கும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. டெங்குவை கட்டுப்படுத்த மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

இந்நிலையில், சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று காலை சந்தித்தார். அப்போது மருத்துவமனையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். தே.மு.தி.க. சார்பில் நோயாளிகளுக்கு கொசு வலை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. அதன்பின்னர் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

1436817531-7944

டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு போதிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவில்லை. டெங்கு காய்ச்சலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கும் தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.

 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடாது. ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response