அரசு ஊழியர்களுக்கு எத்தனை சதவிகித ஊதிய உயர்வு? இன்று முடிவு தெரியும்!

tamilnadu govt

மத்திய அரசின், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்கான பரிந்துரைகளை பெறுவதற்காக, ‘அலுவலர் குழு’ அமைக்கப்பட்டது. அந்த குழு கடந்த செப்டம்பர் 27 ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அறிக்கை வழங்கியது.

அதன் அடிப்படையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, எத்தனை சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவது என்பதை முடிவு செய்வதற்காக, இன்று காலை, 11:15 க்கு, தலைமை செயலகத்தில், அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

முதல்வர் பழனிசாமி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். அமைச்சரவை கூட்டம் முடிந்ததும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது!

Leave a Response